ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் பிரிவில் சிங்கப்பூருக்கு சனிக்கிழமை இரவு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆண்களுக்கான 100 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சலில் சிங்கப்பூர்
அணி முதல் இடத்திற்கு வந்து தங்கப் பதக்கம் வென்றதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு சிறிது நேரத்திலேயே மீட்டுக்கொள்ளப்பட்டது.
ஜோசஃப் ஸ்கூலிங், மிக்கல் லீ, குவா ஸெங் வென், ஜோனதன் ஆகியோரை உள்ளடக்கிய சிங்கப்பூர் அணி 3 நிமிடம் 17.19 விநாடிகளில் நீந்தி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.
3 நிமிடம் 20.13 விநாடிகளில் நீந்தி இரண்டாவது இடத்திற்கு மலேசிய அணி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே போட்டியிலிருந்து சிங்கப்பூர் அணி நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்ததும் சிங்கப்பூர் நீச்சல் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தப் போட்டியை சிங்கப்பூர் அணி 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வென்று வந்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய நீச்சல் பயிற்றுநர் கேரி டான் கூறுகையில், "நமது குழுவினர் யாரிடமும் தவறில்லை. போட்டிச் சூழலில் ஏதோ நடந்திருப்
பதாக நினைக்கிறேன்," என்றார்.
சிங்கப்பூரைப் போல மலேசிய, பிலிப்பீன்ஸ் அணிகளும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அந்த அணி களின் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முதல் இரு இடங்களைப் பிடித்த சிங்கப்பூர், மலேசியக் குழுக்கள் நீக்கப்பட்டதால் 3 நிமிடம் 21.81 விநாடிகள் நீந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட வியட்னாம் குழு தங்கப் பதக்கத்திற்குத் தேர்வு பெற்றது.
வெள்ளிப் பதக்கம் இந்தோனீசியாவுக்கும் வெண்கலம் தாய்லாந்துக்கும் சென்றன.
நீச்சல் வீரர் ஒருவர் முன்கூட்டியே போட்டியைத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணமாக குழுக்கள் வெளியேற்றப்பட்டதாக அறியப்படுகிறது.

