'டிஜிட்டல் ஃபார் லைஃப்' மின்னிலக்க விழா

'டிஜிட்டல் ஃபார் லைஃப்' மின்னிலக்க விழா

2 mins read
0ae87c8f-5245-4d4d-bd1f-07745d140937
-

ஆ. விஷ்ணு வர்­தினி

வாழ்க்கை முழு­தும் மின்­னி­லக்­கம் எனும் 'டிஜிட்­டல் ஃபார் லைஃப்' இயக்­கத்­தின் அங்­க­மாக 'டிஜிட்­டல் ஃபார் லைஃப்' விழா 2022 நிகழ்வு நேர­டி­யா­க­வும் இணை­யத்­தி­லும் நடை­பெ­று­கிறது.

சிங்­கப்­பூர் முழு­தும் இரண்டு பிர­தான இடங்­க­ளி­லும் மற்­றும் இதர 18 இடங்­க­ளி­லும் இந்த 'டிஜிட்­டல் ஃபார் லைஃப்' விழா இடம்­பெ­று­கிறது.

மின்­னி­லக்க முறை­யில் பண வர்த்­த­க­மும், வணி­க­மும், உடல்­நல பரா­ம­ரிப்­பும் கூட வந்­து­விட்­டது. இவ்­வாறு அன்­றாட வாழ்­வி­ய­லில் இரண்­டற கலந்­து­விட்ட மின்­னி­லக்­கத்­தைக் கற்­றுக் கொண்­டாட ஊக்­கு­விக்­கின்­றது இவ்­விழா.

சிறார் முதல் பெரி­யோர் வரை, அவ­ர­வர் வாழ்­வில் மின்­னி­லக்­கத்­தின் துணை­கொண்டு தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான பல்­வேறு இணை­யப் பயி­ல­ரங்­கு­கள் மே 21ஆம் தேதி­யி­லி­ருந்து 29 ஆம் தேதி வரை ஏற்­பா­டா­கி­யுள்­ளன.

மக்­கள், பொது அமைப்­பு­கள், தனி­யார் அமைப்­பு­கள் ஆகிய மூன்று தரப்­புப் பங்­கா­ளி­களை ஒன்­றி­ணைக்க முனைந்­துள்­ளது தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் ஏற்­பாடு செய்­துள்ள 'டிஜிட்­டல் ஃபோர் லைஃப்' இயக்­கம். மின்­னி­லக்க செயல்­

பா­டு­க­ளின் வாயி­லாக வாழ்­வி­யலை மேம்­ப­டுத்த மட்­டு­மின்றி, மின்­னி­லக்­கத்தை வாழ்க்கை பய­ண­மாக அமைத்­துக்­கொள்­ள­வும் இவ்­விழா ஊக்­கு­விக்­கின்­றது.

வாழ்­வதை, விளை­யா­டு­வதை, பணி­பு­ரி­வதை மாற்­றி­ய­மைத்­துள்ள மின்­னி­லக்­க­மா­னது உத்­வே­க­மூட்­டும் வகை­யில் புதுப்­புது வாய்ப்­பு­களை அமைத்து தரு­வ­தோடு, உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு நம்­பிக்­கை­யும் அளிக்­கின்­றது. வாழ்க்­கையை இனி­மை­யாக்­கும் இத்­த­கைய மின்­னி­லக்­கத்­தைப் பயன்­ப­டுத்தி பய­ன­டைய தேவை­யான நல்ல பழக்­க­வ­ழக்­கங்­களை இவ்­விழா அறி­மு­கப்­ப­டுத்த முயல்­கிறது.

நேரடியாகவும் இணையத்திலும் நடைபெறும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட நடவடிக்கைகளில் ஒன்­றாக பிஓ­எஸ்பி (POSB), மூத்­தோ­ருக்­கான மின்­னி­லக்க வங்கி சேவை பயி­ல­ரங்­கினை நடத்­த­வுள்­ளது. இணைய பணப் புழக்க சேவை­களை எவ்­வாறு அணு­கு­வது, இணைய பண மோச­டி­க­ளி­லி­ருந்து எவ்­வாறு நம்மை காத்­துக்­கொள்­வது என்­பது குறித்து இப்­ப­யி­ல­ரங்கு விளக்­கும். தீவு முழுதும் 50 சமூக கூடார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

மென்­பொ­ருள் பயன்­பாட்­டை­யும் நிர­லாக்க மொழி­க­ளை­யும் மாண­வர்­கள் கற்­றுத்­தேர்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. வீடு­களில் குடும்­பத்­தைப் பிணைக்­கும் வகை­யில் மின்­னி­லக்­கத்தை எவ்­வாறு கட்­டுப்­பாட்­டு­டன் கையா­ள­லாம் என்று பெற்­றோ­ருக்கு வழி­காட்­டும் நிகழ்­வு­களும் இவ்

­வி­ழா­வில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.