டிஜிட்­டல் ஃபார் லைஃப் விழா­வில் எதிர்­வ­ரும் நிகழ்­வு­கள்

டிஜிட்­டல் ஃபார் லைஃப் விழா­வில் எதிர்­வ­ரும் நிகழ்­வு­கள்

4 mins read
d1522def-c1b1-4ba8-9af6-7d58d44e728f
-
multi-img1 of 2

கற்­போம் (Let's Learn)

எஸ்.ஜி எனே­பல் (SG Enable)

மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான

மின் அணு­கல் பயி­ல­ரங்கு

மூன்றே மணி நேரத்­தில் மின்­னி­லக்­கத்­தைத் தழு­வு­வது குறித்­தும் இணை­யத் தக­வல் அணு­கல் குறித்த வரை­ய­றை­க­ளை­யும் நல்ல முறை­க­ளை­யும் பற்றி அறி­ய­லாம். மேலும் மின்­னி­லக்க அணு­கல் சோத­னைக்­கும் பயிற்சி வழங்­கப்­படும்.

சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­காக மின்­னி­லக்க மின் அணு­கல் குறித்து மேலும் பகிர்­வ­தும் அதன் தரத்தை மேம்­ப­டுத்­து­வது குறித்து கருத்­து­ரைப்­ப­தும் இதன் நோக்­கம்.

லெங்­கொக் பாரு­வில் அமைந்­துள்ள எனே­ப­லிங் வில்­லேஜ் (Enabling Village) எனும் இடத்­தில் மே 29ஆம் தேதி நடை­பெ­றும் இந்த நிகழ்­வுக்கு இன்றே பதி­வு­செய்­யுங்­கள்.

ஃபேர்பி­ரைஸ் (Fairprice)

கையில் பண­மில்­லா­மல், ஃபேர் பிரைஸ் செய­லி­யைப் பயன்­ப­டுத்தி லிங்க் புள்­ளி­கள் பெறு­வ­தெப்­படி

இந்த நிகழ்வு மூலம் துரி­த­மாக ஃபேர்பி­ரைஸ் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து பொருள்­கள் வாங்­கு­வ­து­மூ­லம் பலன்­பெற தொடங்­கு­வது குறித்து அறி­ய­லாம்.

கடைக்­குச் சென்று முதல் முறை செயலி மூலம் பொருள் வாங்­கும்­போது 300 லிங்க்பாய்ண்ட்ஸ் பெறுங்­கள்.

ஹார்ட்­பீட்@பிடோக் (Heartbeat@Bedok) இடத்­தில் மே 28, 29ஆம் தேதி­களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை­யி­லும் லெங்­கொக் பாரு­வில் அமைந்­துள்ள எனே­ப­லிங் வில்­லேஜ் எனும் இடத்­தில் மே 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை­யி­லும் இந்த நிகழ்வு நடை­பெ­று­கிறது.

பிஓ­எஸ்பி (POSB)

மின்­னி­லக்க நலன்

'பிஓ­எஸ்பி டிஜி­பேங்க்' செயலி மூலம் தின­சரி வங்கி பரி­வர்த்­த­னை­கள் சுல­ப­மா­க­வும் மேலும் பாது­காப்­பு­ட­னும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சன்­டெக் சிட்­டி­யில் மே 21, 22 ஆம் தேதி­களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை­யி­லும் ஹார்ட்­பீட்@பிடோக்­கில் மே 28, 29ஆம் தேதி­களில் பிற்­ப­கல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை­யி­லும் நடை­பெ­றும் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்டு 'பிஓ­எஸ்பி டிஜி­பேங்க்' செய­லி­யில் எப்­படி பதி­வு­செய்­வது என்­பதை படிப்­ப­டி­யான துணை­யு­டன் அறிந்­து­கொள்­ள­லாம். பிர­ப­ல­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் அம்­சங்­கள் குறித்த மேல் விவ­ரங்­களும் பெற­லாம்.

உங்­களை இணை­யத்­தில் பாது­காத்­துக்­கொள்ள தேவை­யான பாது­காப்பு உத்­தி­க­ளை­யும் அறி­ய­லாம்.

'பிஓ­எஸ்பி டிஜி­பேங்க்' 'யூசர் ஐடி' மற்­றும் 'பின்', உங்­க­ளது மின்­னஞ்­சல் முக­வரி ஆகி­ய­வற்றை தயா­ராக வைத்­து­கொள்­ளுங்­கள். ஆனால் செய­லி­யின் மறைச்­சொற்­களை தனிப்­பட்ட விவ­ரங்­களை எவ­ரி­ட­மும் பகி­ர­வேண்­டாம்.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வய­து­டை­ய­வர்­க­ளுக்கு இந்­தப் பயி­ல­ரங்கு பல­ன­ளிக்­கும்.

என்­டி­யுசி லெர்­னிங் ஹப்

(NTUC Learning Hub)

பதிவு உரு­வாக்­கு­தல்

சமூக ஊட­கங்­களில் காணொ­ளி­கள் மிக­வும் பிர­ப­ல­மா­கி­யுள்­ளன. மக்­களை ஈர்க்­கும்­வண்­ணம் புத்­தாக்­கத்­து­டன் நீங்­களும் காணொ­ளி­க­ளைத் தயா­ரிக்­க­லாம்.

'க்ளிப்ஸ்' எனும் செயலி மூலம் சுவா­ர­சி­ய­மான காணொ­ளி­களை நல்ல கதை­யோட்­டத்­து­ட­னும் ஈர்க்­கும் வகை­யி­லான கூறு­க­ளை­யும் கொண்டு எவ்­வாறு தயா­ரிப்­பது என்­ப­தைக் கற்­க­லாம்.

ஃபேஸ்புக், டிக்­டாக், இன்ஸ்­ட­கி­ராம் போன்ற தளங்­க­ளுக்கு தக­வல்­களை உரு­வாக்­கு­வ­தை­யும் பற்றி அறி­ய­லாம்.

ஹார்ட்­பீட்@பிடோக் இடத்­தில் மே 23, 24ஆம் தேதி­களில் காலை 11 மணிக்­கும் பிற்­ப­கல் 2 மணிக்­கும் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி நடை­பெ­று­கிறது.

'சில்­வர் டிஜி­டல் கிரி­யே­டர்ஸ்' உடன் இணைந்து உடனே கற்­றுக்­கொள்­ளுங்­கள்.

ட்ரை­ஜென்(TriGen)

நம்மை சுற்­றி­யுள்ள மூத்­தோர் மின்­னி­லக்­கத் திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள நாம் எவ்­வாறு உத­வ­மு­டி­யும் என்­ப­தற்­கான உத்­தி­களை இதன் மூலம் அறி­ய­லாம்.

கற்­றுக்­கொள்ள உத­வும் மேலும் பல நிகழ்­வு­களும் உண்டு. அவற்­றின் மேல் விவ­ரங்­களை இணை­யத்­த­ளத்­தில் அறி­ய­லாம்.

கண்டறிவோம் (Let's Explore)

சிங்கப்பூர் தேசிய கண் மையம்

(SNEC) - நடமாடும் கண் பேருந்து

பொதுமக்கள் பேருந்தில் ஏறி சுற்றிப்பார்ப்பதோடு அதில் உள்ள வெவ்வேறு இயந்திரங்களைப் பற்றி கற்க சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 அல்லது 15 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு சுற்றுலாவிலும் 3 அல்லது 4 பொதுமக்கள் குழுவாகப் பங்குபெறுவர். கண் பரிசோதனை பேருந்தில் இடம்பெறாது.

லெங்கொக் பாருவிலுள்ள எனேபலிங் வில்லேஜ் எனும் இடத்தில் மே 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறும்.

பங்காற்றுவோம்

(Let's Play a Part)

எஞ்சினீரிங் குட் - 'ரீமேக்இட்' மடிக்கணினி பழுதுபார்த்தல்

உங்கள் மடிக்கணினிக்கு உள்ளே எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பயிலரங்கு மூலம் அதுபற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மடிக்கணினியை முழுவதுமாக பிரித்து மீண்டும் அதை ஒன்று சேர்ப்பதற்கான அடிப்படை கல்வியறிவையும் திறன்களையும் இந்தப் பயிலரங்கில் கற்கலாம்.

மடிக்கணினியின் வெவ்வேறு பாகங்களை அடையாளம் காண்பது, அடிப்படை பிரச்சினைகள், அவற்றைக் களைவதற்கான வழிகள் போன்றவற்றை அறியலாம்.

உடைந்த பாகங்களை 'இபொக்ஸி' கொண்டு பழுது நீக்கவும் கற்கலாம்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் மே 22 அன்றும் எனேபலிங் வில்லேஜில் மே 29 அன்றும் மூன்று மணி நேர பயிலரங்கு நடைபெறும்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்ய:

https://go.gov.sg/digitalforlifefestival2022