ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த 13 வயது சிறுவன்

ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த 13 வயது சிறுவன்

2 mins read
59993943-2686-41a2-aa69-cfe9bcd6ae69
அந்தப் பதின்ம வயது இளையர், 'கிளாடியா' என்ற பெயரில் 'டெலிகிராம்' வழியாக வாடிக்கையாளர்களை ஈர்த்ததாகக் கூறப்பட்டது. -

லக்னோ: ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கும் முன்னர் அந்த ஒரு வயது குழந்தையின் தந்தை தம்மை அறைந்தார் என்றும் தமது குடும்பத்தாரையும் பலரது முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார் என்றும் அவன் கூறினான்.

குழந்தை காணாமல் போனதாக அக்குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளி மைதானத்தில் குழந்தை அணிந்திருந்த சட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி முழுவதும் தேடியதில் அந்தப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், குழந்தையின் கால்களில் செங்கற்களும் கட்டப்பட்டிருந்தன. எனவே இது கொலைதான் என முடிவுக்கு வந்த காவல் துறையினர், அந்தப் பகுதியில் உள்ள அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் 13 வயது சிறுவனின் குற்றம் அம்பலமானது.

அதன்படி, நேற்று(ஞாயிறு) குழந்தை அதன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த சிறுவன் குழந்தையைத் தூக்கிச் சென்று உடைகளை களைந்து பள்ளியின் தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறான். மேலும், குழந்தை தப்பித்துவிட கூடாது என்பதற்காக அதன் கால்களில் செங்கற்களையும் சிறுவன் கட்டி இருக்கிறான்.

சிறுவனின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட பின்னர், காவல் துறையினர் அவனை கைது செய்தனர். அவனை சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தது.