மாமியார்-மருமகள் அலப்பறைகள்: 'சப்பாத்தியைத் திருப்பிப் போடு'(காணொளி)

மாமியார்-மருமகள் அலப்பறைகள்: 'சப்பாத்தியைத் திருப்பிப் போடு'(காணொளி)

1 mins read
2c8ca12e-f8a8-4897-bd68-c8399be6d600
-
multi-img1 of 2

பொதுவாக சமூக வலைத்தளங்களில் பல்வகையான நகைச்சுவைக் காணொளிகளைப் பார்த்து ரசித்து சிரித்திருப்போம்.

அந்த வரிசையில் மாமியார்-மருமகள் அலப்பறைகள் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. இந்தக் காணொளியும் அப்படித்தான். @perfectly_arranged இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதுபோன்று நிறைய காணொளிகள் உள்ளன ஆனால் இந்த குறிப்பிட்ட காணொளி இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இங்கே மாமியார் ஒருவர் மருமகளுக்கு சப்பாத்தி சுடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார். அவரும் மாமியார் சொல்வதை வேதவாக்காகப் பின்பற்ற சப்பாத்தி ஒரு பக்கம் வெந்துவிடுகிறது. சப்பாத்தியைத் திருப்பிப் போடு என்று மாமியார் கூற மருமகள் என்ன செய்கிறாள் என்று நீங்களே பாருங்கள்.

காணொளி: @perfectly_arranged இன்ஸ்டகிராம்

இணைய முகவரி: https://www.instagram.com/perfectly_arranged/