புதுடெல்லி: வட மாநிலங்களை கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், அனலின் தகிப்பை தாங்கமுடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
பல இடங்களிலும் 48 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி வருவதால், பொது இடங்களுக்கு வருபவர்கள் தலை, முகத்தை துணியால் மூடியபடியும் குடைகளைப் பிடித்துக்கொண்டும் வருகின்றனர்.
கோடைக்காலம் தொடங்கி உள்ள சூழலில் ெடல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
டெல்லியிலும் உத்தரப் பிரதே சத்திலும் ஞாயிறன்று (மே 15) அதிகபட்சமாக 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
1966ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் நேற்று முன்தினம்தான் இந்த அளவுக்கு ஆக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் நேற்று அதிக அளவில் வெப்பம் உணரப்பட்டது. வெயில், அனல் காற்றின் பாதிப்பால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறுகையில், "மே 15 இந்த ஆண்டின் வெப்பமான நாளாகும். வடமேற்கு டெல்லியின் முங்கேஷ்பூரில் அதிகபட்சமாக 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நஜாப்கரில் 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அண்டை நகர மான குர்கானில் 48.1 டிகிரி செல்சியஸ் பதிவானது," என்றார்.
இதனிடையே, வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தானுக்கு சிவப்பு எச்சரிக்கையும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு, மத்திய இந்தியாவில் வீசும் அனல் காற்றின் தீவிரம் இன்று (மே 17) சற்று குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த ஞாயிறன்று அதிகபட்சமாக 49 டிகிரியைத் தாண்டியதால் கடும் வெப்பம் நிலவியது.
இந்த நகரத்தில் உச்சபட்சமாக மே 10, 1966 அன்று 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யிருந்தது. அதற்குப்பிறகு இப்ேபாது தான் அங்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனினும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளது.

