மனைவியா் தினம் கொண்டாட அமைச்சா் கோரிக்கை

மனைவியா் தினம் கொண்டாட அமைச்சா் கோரிக்கை

1 mins read
1aca0263-93b7-4850-b143-8b3e099aaf54
-

மும்பை: அன்னையா் தினத்தைக் கொண்டாடுவது போல் மனைவியா் தினம் என்ற ஒரு தினத்தையும் கொண்டாடவேண்டும் என்று

மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கோரிக்கை விடுத்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், சாங்லியில் நடைெபற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "தாய் நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி நம்மை ஒரு மனிதனாக உருவாக்கு கிறாா். அதேநேரத்தில் மனைவி நமது வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் வாழ்க்கைத் துணையாக வருகிறாா். நமது நல்லது, கெட்டது அனைத்திலும் உடனிருக்கிறாா். ஒவ்வோா் ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். பெரும்பாலான வா்களுக்கு மனைவிதான் காரணம். எனவே மனைவியா் தினமும் கொண்டாடப்பட வேண்டும்," என்றாா்.