மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

1 mins read
0be51442-cbc7-4d42-ab13-0206d3ed4161
-

லும்பினி: புத்­த­ரின் பிறந்­தநாள் விழாவான புத்த பூர்­ணிமா விழா நேப்­பாள நாட்­டின் லும்­பி­னி­யில் நேற்று கொண்­டா­டப்­பட்­டது.

இவ்விழாவை ஒட்டி, புத்­த­ர் பிறந்த இட­மா­கக் கரு­தப்­படும் நேப்பாளத்­தில் உள்ள லும்­பி­னிக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி ேநற்று தனி விமா­னத்­தில் பய­ணம் மேற் கொண்டார்.

"புத்த ஜெயந்­தி­யின் புனி­த­மான தருணத்தில், மாயா­தேவி கோயி­லில் பிரார்த்­தனை செய்ய ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன். புத்­தர் பிறந்த புனிதத் தலத்­தில் மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக மில்­லி­யன்கணக்­கான இந்­தி­யர்­களின் அடிச்­சு­வ­டு­க­ளைப் பின்­பற்­று­வ­தில் நான் பெரு­மைப்­படு கிறேன்," என்று பிரதமர் மோடி நேப்பா­ளம் புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கக் குறிப்பிட்டிருந்­தார்.

லும்பினியில் கட்டப்பட உள்ள புத்த கலா­சா­ரம், பாரம்­ப­ரிய மைய கட்­டு­மா­னத்­ தளத்துக்கு அடிக்­கல் நாட்­டி­ய­வர், அங்குள்ள மாயா­தேவி கோயி­லிலும் வழிபாடு செய்தார்.

"கௌதம புத்­த­ர் பிறந்த இட­மான லும்­பி­னி­யில் உள்ள புனி­தத் தல­மான மாயா­தேவி கோயி­லில் நேப்­பாள நாட்­டுப் பிர­த­மர் ஷேர் பக­தூர் தியூ­பா­வு­டன் பிர­த­மர் மோடி வழி­பாடு செய்­தார்," என்று நேப்பாள வெளி­யு­றவு அமைச்சு டுவிட்­ட­ரில் தெரி­வித்து இருந்தது.

தனது பய­ணம் குறித்து மோடி வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில், "புத்த பூர்­ணிமா நன்னாளில் நேப்பாள மக்­க­ளு­டன் இருப்­ப­தில் மகிழ்ச்சி. லும்­பி­னி­யில் நடை­பெற உள்ள நிகழ்ச்­சி­களை ஆவ­லு­டன் காண காத்திருக்­கி­றோம்," எனப் பதி­விட்­டுள்­ளார்.

கடந்த 2014ஆம் ஆண்­டுக்­குப் பிறகு பிர­த­மர் மோடி நேப்பா­ளத்­துக்­குச் செல்­வது இது ஐந்­தா­வது முறையாகும்.

மேலும், இரு நாடு­க­ளுக்கு இடையே முக்­கிய ஒப்­பந்­தங்­களும் கையெ­ழுத்­தாக உள்­ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.