65 கி.மீ. தூரம் நடந்த பெண் சாலையில் குழந்தையை ஈன்றார்

65 கி.மீ. தூரம் நடந்த பெண் சாலையில் குழந்தையை ஈன்றார்

1 mins read
d41f300a-97df-4579-a126-a3bafc052c55
குழந்­தைக்­கான சிகிச்சை முடிந்தபின்­னர் தாய்-சேயை பெண்ணின் தாய் வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக மருத்துவர்கள் தெரி­வித்­த­னர்.படம்: ஊடகம் -
multi-img1 of 2

திருப்­பதி: ஆந்­திர மாநி­லம், கிழக்கு கோதா­வரி மாவட்­டம், ராஜ­முந்­திரி­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர் கொத்­துரு வர்­ஷினி. நிறை­மாத கர்ப்­பி­ணி­யான இவர், கண­வ­ரு­டன் கூலி வேலை செய்­வ­தற்­காக திருப்­ப­திக்கு வந்­தார்.

வந்த இடத்­தில், அவ­ரது கண­வர் தின­மும் மது அருந்­து­வ­தும் சண்டை போட்டு அடித்­துத் தாக்கு வது­மாக இருந்­துள்­ளார்.

இத­னால் மனம் வெறுத்­துப் போன வர்­ஷினி, கண­வன் மீதுள்ள கோபத்­தில் வீட்­டை­விட்டு வெளி யேறி­னார்.

விசா­கப்­பட்­டி­னத்­தில் உள்ள தனது தாய் வீட்­டுக்­குச் செல்ல நினைத்­தார். ஆனால், அவ­ரி­டம் போதிய பண­மில்லை.

மீண்­டும் கண­வ­ரி­டமே திரும் பிச் செல்­ல­வும் அவர் விரும்­பாத தால், கால் போன போக்­கில் நடந்­தார். திருப்­ப­தி­யில் தனது பயணத்­தைத் துவங்­கிய வர்­ஷி­னி­, ஏ­றத்தாழ­ 65 கி.மீ. தொலை­வில் உள்ள நாயுடு­பேட்­டைக்கு வந்து சேர்ந்­தார்.

நீண்­ட­நே­ரம் நடந்­த­தால் மிக­வும் களைப்­ப­டைந்த வர்­ஷி­னிக்கு அங்­குள்ள பேருந்து நிலை­யத்தை அடை­யும் தறு­வா­யில் பிர­சவ வலி ஏற்­பட்­டது. வலி தாங்­க­மு­டி­யா­மல் சாலை­யி­லேயே அமர்ந்து கத­றி­னார். இளை­யர் ஒரு­வர் 108 அவ­சர சிகிச்சை வாக­னத்தை அழைத்­தார்.

வாக­னம் வரு­வ­தற்­குள் சாலை­யி­லேயே பிர­ச­வ­மா­னது. பெண் குழந்தை பிறந்­தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்­கள் சிலர், துணி­க­ளைக் கொண்­டு­வந்து மறைப்பை ஏற்­ப­டுத்­தி­னர்.

தாய்-சேய் இரு­வ­ரும் அவ­சர சிகிச்சை வாக­னம் வந்­த­தும் நெல்­லூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

தாயும் சேயும் நல­மாக இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறி­னர்.