உதய்பூர்: மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் அக்டோபர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள தாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
"ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்ற விஷயத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். ஒரு நபருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்ற விதிமுறைகள் காங்கிரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன," என்றும் அவர் மேலும் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடை ெபற்ற சிந்தனை அமர்வு மாநாடு, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நிறைவுரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "குடும் பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிட அனுமதி வழங்குவது என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியில் ஒருவர் ஒரு பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது," என்றார்.
சாதாரண மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டதாக ஆதங்கம் ெதரிவித்துள்ள ராகுல் காந்தி, மக்களுடனான உறவை வலுப்படுத்த நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் சார்பில் மாபெரும் பாதயாத்திரை நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க உள்ளதாகக் கூறியவர், கட்சியில் உள்ள இளைஞர்கள் உள்பட அனைவரும் யாத்திரையில் பங்கேற்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
"என்னைப் போன்ற வயதான வர்களும் மூச்சு வாங்காமல் யாத்திரையில் பங்கேற்கும் வழி வகைகளை காங்கிரஸ் தலைவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்," எனவும் சோனியா நகைச்சுவையுடன் கூறியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.