வெள்ளம்: மூவர் பலி, 57,000 பேர் பாதிப்பு

கவு­ஹாத்தி: அசாம் மாநி­லத்­தில் கொட்­டித் தீர்த்த கன­ம­ழை­யால் ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஏரா­ள­மான குடி யிருப்­பு­கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

இரண்டு நாள்­க­ளாக பெய்த கன­ம­ழை­யால் பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.

ரயில்வே தண்­ட­வா­ளங்­கள், பாலங்­கள், சாலை போக்­கு­வ­ரத்­து­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மின்­சார இணைப்­பு­கள், தக­வல் தொடர்­பு­களும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

222 கிரா­மங்­களில் வெள்­ளம் சூழ்ந்த நிலை­யில், 57,000க்கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக அசாம் மாநில பேரி­டர் மேலாண்­மைக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.

மழை வெள்­ளத்­தில் சிக்கி ஒரு குழந்தை உள்­பட மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது­த­விர, 1,434 கால்­ந­டை­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்டு உள்­ளன. மொத்­தம் 202 வீடு­கள் வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்டு உள்­ளன.

மேலும் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் விவ­சாய நிலங்­களும் தண்­ணீ­ரில் மூழ்­கி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

வட­கி­ழக்கு மாநி­லங்­களில் ஒன்­றான அசா­மி­லும் அதன் அண்டை மாநி­லங்­க­ளான மேகா­லயா, அரு­ணா­ச­லப் பிர­தே­சத்­தி­லும் கடந்த சில நாள்­க­ளாக தொடர்­மழை பெய்து வரு­வ­தால், பல்­வேறு ஆறு­க­ளி­லும் வெள்­ளப் பெருக்கு ஏற்­பட்டு உள்­ளது.

இவ்வாண்­டில் முதல்முறை யாக ஏற்­பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்­கால் கச்­சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்­லோங் மேற்கு, நகா­வன், கம்­ரூப் ஆகிய 6 மாவட்­டங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்டு உள்­ளன.

1,400 பய­ணி­க­ளைக் கொண்ட இரண்டு ரயில்­கள் நடு­வ­ழி­யில் நின்­றன. அவர்­களில் 1,245 பேர் மீட்­கப்­பட்டு உள்­ள­னர். 119 பய­ணி­கள் விமா­னத்­தின் மூலம் சில்­சார் கொண்டு செல்­லப்­பட்டு உள்­ள­னர். வெள்­ளம் பாதித்த மக்­களை மீட்­கும் பணி­யில் ராணு­வம், துணை ராணு­வப் படை­கள், அசாம் பேரி­டர் மீட்புப் படை, தீய­ணைப்புப் படையினர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நிவா­ரணப் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!