இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை தமது குடியிருப்புகளில் சோதனை நடத்தியும் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ரெதரிவித்தார்.
பஞ்சாப்பில் உள்ள மின்சார ஆலைத் திட்டத்திம் ஒன்றின் தொடர்பில் கையூட்டு பெற்று சீனர்கள் சிலருக்காக விசா அனுமதிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக திரு சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் ஏற்கெனவே சிபிஐஜிடம் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தந்தை மகனுடன் தொடர்புள்ள ஒன்பது வீடுகளின் மீது அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை திரு சிதம்பரம் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தபோது அக்குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோதனைகளில் ஒன்றும் தென்படவில்லை என்றும் இந்தச் சோதனை நடத்தப்படும் நேரம் மிகவும் சுவாரசியமானது என்று திரு சிதம்பரம் கூறினார். அவரும் திரு கார்த்தி சிதம்பரமும் தனித்தனியே ஐஎன்ஸ், ஏர்செல் மேக்சிஸ் ஆகிய இரு ஊடக, தொலைதொடர்பு நிறுவனங்கள் சம்பந்தமான ஒப்பந்தங்களின் தொடர்பில் வழக்குகளைச் சந்திக்கின்றன.

