விமானக் கட்டணம் உயருகிறது

விமானக் கட்டணம் உயருகிறது

1 mins read
27394652-5cf0-4614-ae1a-d427de52da9f
கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: ஏடி­எஃப் எனப்­படும் விமான எரி­பொ­ருளின் விலை திங்­கள்­கி­ழமை உச்­சத்­தைத் தொட்­டது. இதன் கார­ண­மாக விமா­னப் பய­ணக் கட்­ட­ணங்­கள் உய­ரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

விமான எரி­பொ­ரு­ளின் விலை 15 நாள்­க­ளுக்கு ஒரு­முறை மாற்றி அமைக்­கப்­பட்டு வரு­கிறது. மே மாதத்­தில் ேநற்று முன்­தி­னம் விலை மாற்­றப்­பட்­டது.

அதன்­படி ஒரு கிலோ லிட்­டர் விமான எரி­பொ­ருள் ரூ.6,188 அதி­க­ரிக்­கப்­பட்டு ரூ.1,23,039 ஆனது. அதா­வது, ஒரு லிட்­ட­ரின் விலை 123 ரூபாய். இந்த விலை ஏற்­றம் 5.29 விழுக்­காடு ஆகும்.

இந்த உயர்வு கார­ண­மாக இது­வரை இல்­லாத அள­வுக்கு விலை உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

இந்த ஆண்­டில் மட்­டும் 10வது முறை­யாக விமான எரி­பொ­ருள் விலை அதி­க­ரித்து உள்­ளது. அதன்­படி, ஜன­வரி 1 முதல் இது­வரை 55 விழுக்­காடு விலை உயர்ந்­துள்­ளது. அதா­வது கிலோ லிட்­ட­ருக்கு ரூ.49,017 கூடி­யுள்­ளது.

விமா­னங்­க­ளுக்­கான செல­வி­னத்­தில் 40 விழுக்­காடு எரி­பொ­ரு­ளுக்­கு­ரி­யது. எரி­பொ­ருள் விலை ஏற்­றத்­தால் விமா­னப் பய­ணக் கட்­ட­ணங்­கள் அதி­க­ரிக்­கும் நிலை ஏற்­பட்டுள்­ளது. உள்­நாடு மற்­றும் அனைத்­து­ல­கப் பய­ணக் கட்­ட­ணங்­கள் உய­ர­லாம் என ெபாரு­ளி­யல் பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொரோ­னாவி­லி­ருந்து மீண்டு வரு­வ­தால் வெளி­நாட்­டுப் பய­ணங் களை மேற்­கொள்ள விரும்பும் சுற்­றுப் பய­ணி­க­ளுக்கு இச்­செய்தி கவலை அளிக்­கும் என்­கின்­ற­னர் அவர்­கள். உக்­ரேன்-ரஷ்யா போர் கார­ண­மாக அனைத்­து­லக எரி­பொ­ருள் விநி­யோ­கத்­தில் சிக்­கல் ஏற்­பட்டு வரு­கிறது. இதன் தாக்­கம் விமான எரி­பொ­ருள் விலையிலும் பிர­தி­ப­லிக்­கிறது.