புதுடெல்லி: சாமி சிலைகளைத் திருடிச் சென்றவர்கள் கெட்ட கனவு கண்டதால் சிலைகளை திருப்பி ஒப்படைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
தரூன்கா என்னும் இடத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த பாலாஜி கோவில் உள்ளது. மே 9ஆம் தேதி இந்தக் கோவிலுக்குள் நுழைந்த திருடர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சாமி சிலை
களைக் களவாடிச் சென்றனர்.
ஆனால், ேநற்று முன்தினம் 16ல் 14 சிலைகள் மீண்டும் கோவில் அர்ச்சகரின் வீட்டருகே ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்ததாக பிடிஐ செய்தி கூறியது. அதில் கடிதம் ஒன்றும் இருந்தது.
சிைலகளைத் திருடிய பின்னர் ஒவ்வொரு நாளும் தங்களுக்குக் கெட்ட கனவு வருவதாகவும் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை என்றும் பயத்தில் சிலைகளை ஒப்படைப்பதாக வும் அதில் திருடர்கள் எழுதியிருந் ததாக காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் சிங் கூறினார்.

