நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 81 வயது ஓவியர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது 'டிஜிட்டல் ரேப்' குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெளரிஸ் ரைடர் என்னும் அந்த முதியவர் கோட்வாலி என்னும் பகுதியில் தமது பராமரிப்பில் இருந்த 17 வயதுச் சிறுமிக்கு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை தந்தது அம்பலமாகி உள்ளது. அச்சம் காரணமாக தயங்கிய சிறுமி, பாலியல் துன்புறுத்தல்களை ஆதாரங்களுடன் பதிவு ெசய்து துணிச்சலுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
'டிஜிட்டல் ரேப்' என்பது மின்னிலக்கத்துடன் தொடர்பில்லாத குற்றம். கை, கால் பெருவிரல்
களால் மற்றவர்களின் அந்த உறுப்பினுள் வலுக்கட்டாயமாக நுழைப்பதே 'டிஜிட்டல் ரேப்'. இவ்வாறு செய்வது மானபங்கக் குற்றம் என்றிருந்த நிலையில், 2012 நிர்பயா பாலியல் கொடூர மரணத்துக்குப் பின்னர் பாலியல் வன்புணர்வு (ரேப்) என்று இது வகைப்படுத்தப்பட்டு தண்டனை அதிகரிக்கப்பட்டது.
இந்தக் குற்றத்துக்கு ஐந்து ஆண்டு முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

