பாட்னா: பீகார் மாநிலத்தில் நீதிபதி வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சசாராம் பகுதியில் மாஜிஸ்திரேட் நீதிபதியாக இருக்கும் மகேந்திரநாத் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை 3 பேர் சென்றனர். துப்பாக்கியைக் காட்டி நீதிபதியின் மனைவி குமாரியை மிரட்டி தாக்கிய அவர்கள், அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்தனர். தொடர்ந்து நீதிபதி வீட்டில் இருந்த நகை, ரொக்கத்தையும் அந்த கொள்ளைக்
கும்பல் திருடிச் சென்றது.

