‘மழையால் தணிந்த வெப்பம் மீண்டும் அதிகரிக்கும்’

புது­டெல்லி: தலைநகர் ெடல்­லி­யின் ஒரு சில பகு­தி­களில் இரவில் பெய்த மழை காரணமாக கடந்த புதனன்று பதிவான வெயில் சற்று தணிந்து இருந்­தது.

இருப்­பி­னும், நேற்­றைய தினத் தைக் காட்டிலும் இன்று வெப்­பத்­தின் தாக்­கம் சற்று அதிகரித்துக் காணப்படும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்துள்ளது.

இன்று 43 டிகிரி செல்­சி­ய­சாக வெப்பநிலை உய­ரும் என்றும் அதே நேரத்­தில் தலை­ந­க­ரின் மற்ற சில பகு­தி­களில் வெப்­ப­நிலை 44-45 டிகிரி செல்­சி­ய­சாக உய­ரக்­கூ­டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

1966ஆம் ஆண்­டுக்­குப் பிறகு டெல்­லி­யி­லும் உத்­த­ரப் பிரதேசத்­தி­லும் கடந்த ஞாயி­றன்று (மே 15) அதி­க­பட்­ச­மாக 49.2 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வான தாக தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகை யில், டெல்லியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் கூடங் களை மக்கள் நாடிச் செல்கின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாநிலங்களில் நிலவும் கடும் வெயில், அனல் காற்று பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!