பெங்களூரு: பெங்களூருவில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக 3,000க்கும் ேமற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததில் பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இங்குள்ள எசரகட்டா தனியார் மருத்துவமனைக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
எண்ணூர், மல்லேஸ்வரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, "மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.25,000 நிவாரண நிதி வழங்கப்படும்," என்றார்.
பெங்களூருவில் கனமழையால் இருவர் உயிரிழந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

