ராகுல்: இந்திய எல்லையில் சீனா 2வது பாலம் கட்டுகிறது

ராகுல்: இந்திய எல்லையில் சீனா 2வது பாலம் கட்டுகிறது

1 mins read
eb3a1978-9347-4933-a2e4-499ea17eaa45
-

புது­டெல்லி: பிர­த­மர் மோடி நாட்­டைப் பாது­காக்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சீன ராணு­வம் கிழக்கு லடாக்­கில் அத்துமீ­றி­யதை அடுத்து அதற்­கும் இந்தியாவுக்கும் இடையே பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது.

இரு­நாட்டு ராணு­வ­மும் எல்­லை­யில் படை­களை குவித்­தன. ராணுவ உயர் அதி­கா­ரி­கள் மட்டத் ­தி­லான தொடர் பேச்­சு­வார்த்­தைக்குப் பிறகு இரு தரப்­பி­லும் படை­கள் குறைக்­கப்­பட்­டன. சில இடங்­களில் மட்­டும் இரு­த­ரப்­பி­லும் படை­கள் விலக்­கிக் கொள்ளப்­ ப­ட­வில்லை.

இந்த நிலை­யில் எல்­லை­யில் ராணுவ கட்­ட­மைப்பை வலுப் ­படுத்த பாங்­காங் சோ அருகே மிகப்­பெ­ரிய பாலம் ஒன்றை சீனா கட்­டி­யது.

தற்­போது பாங்­காங் சோ ஏரி­யின் குறுக்கே சீன ராணு­வம் இரண்­டா­வது பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்­கைக் கோள் புகைப்­ப­டம் வெளி­யாகி உள்­ளது.

இதைச் சுட்­டிக்­காட்டி பேசிய காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல், "சீனா பாங்­காங் பகு­தி­யில் முதல் பாலம் கட்­டி­ய­தற்கு இந்­திய அரசு, நாங்­கள் நிலை­மையைக் கவ­னித்து வரு­கி­றோம் என்­றது. சீனா பாங்­காங்­கில் இரண்­டா­வது பாலம் கட்­டி­யுள்­ளது. இதற்­கும் இந்­திய அரசு, நாங்­கள் நிலை­மையைக் கவ­னித்து வரு­கி­றோம் என்­றது. இந்­தி­யா­வின் தேசிய பாது­காப்­பி­லும் பிராந்­திய ஒரு­மைப்­பாட்­டி­லும் பேச்சு­வார்த்தை என்­ப­தற்கு இடமில்லை. தைரி­ய­மில்­லாத, பணி­வான பதில் ஒன்­றும் செய்ய போவ­தில்லை. பிர­த­மர் மோடி நாட்டை பாது­காக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.