ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 10 தொழி லாளர்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு 10.15க்கு திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கப் பாதையைச் சுற்றிலும் இடிபாடுகள் இருப்பதால் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் உடனே மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மூன்று பேர் மீட்கப்பட்டு ராம்பன் மாவட்ட மருத்துவ மனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
படம்: இபிஏ

