மோடி: மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்ப முயற்சி

புது­டெல்லி: மொழியை வைத்து சர்ச்­சை­க­ளைக் கிளப்ப முயற்சி நடை­பெ­று­கிறது என்று பிர­த­மர் மோடி பேசி­யுள்­ளார்.

சில நாட்­க­ளாக இது நடந்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்டு உள்­ளார்.

ராஜஸ்­தா­னில் நடந்த பா.ஜ.க. நிர்­வா­கி­கள் கூட்­டத்­தில் அவர் காணொளி வழி­யா­கப் பேசி­னார்.

"கடந்த சில நாட்­க­ளாக மொழியை வைத்து சர்ச்­சை­களைக் கிளப்­பும் முயற்­சி­கள் நடப்­பதை பார்க்­கி­றோம்.

"ஒவ்­வொரு பிராந்­திய மொழி களை­யும் இந்­திய கலா­சா­ரத்­தின் பிர­தி­ப­லிப்­பா­க­வும் வணங்­கு­வ­தற்கு மதிப்­புள்­ள­தா­க­வும் பார­திய ஜனதா கரு­து­கிறது.

"புதிய தேசிய கொள்­கை­யில் அனைத்து வட்டார மொழிகளுக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்பட்டு உள்­ளது.

"மொழி­களை, நாட்­டின் சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான இணைப்­பாக பாரதிய ஜனதா கரு­து­கிறது. சுதந்­தி­ரம் அடைந்த பிறகு, குடும்ப கட்­சி­கள் ஊழல், மோசடி என நாட்­டின் மதிப்புமிக்க நேரத்தை வீண­டித்­துள்­ளன," என்று திரு ேமாடி தெரி­வித்­தார்.

"பாஜக அரசு இம்­மா­தத்­து­டன் எட்டு ஆண்­டு­களை நிறைவு செய் கிறது. இத்­தனை வரு­டங்­கள் தேசத்­திற்கு சேவை செய்­வ­தா­க­வும் ஏழை­கள் மற்­றும் நடுத்­தர மக்­க­ளின் நல­னுக்­காக உழைத்து சமூக நீதி மற்­றும் பாது­காப்பை உறுதி செய்வ தாக­வும் பெண்­க­ளின் அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தா­க­வும் இந்த அரசு அமைந்து வரு­கிறது.

உல­கமே இன்று இந்­தி­யாவை பெரும் எதிர்பார்ப்­பு­டன் பார்க்­கிறது. நம் நாட்டு மக்­கள் பாஜ­கவை மிகுந்த நம்­பிக்கையு­டன் பார்க்­கின்­ற­னர்," என்று அவர் குறிப்­பிட்டு உள்ளார்.

பார­திய ஜனதா கட்சி அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்­டிய தரு­ணம் இது என்று பிர­த­மர் மோடி மேலும் தெரிவித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!