அசாமில் தொடர் மழை; வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட வந்த எம்எல்ஏ மீட்புப் படை வீரர் முதுகில் சவாரி

அசாமில் தொடர் மழை; வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட வந்த எம்எல்ஏ மீட்புப் படை வீரர் முதுகில் சவாரி

2 mins read
9bc6d5e8-ba80-4503-84b4-b8a3d156ef82
வெள்ளத்தில் கால் வைக்க விரும்பாத அசாம் எம்எல்ஏசிபு மிஸ்ரா, மீட்புப் படை வீரர் முதுகில் ஏறி சவாரி செய்துள்ளார்.படம்: இந்திய ஊடகம் -

திஸ்­பூர்: அசாம் மாநி­லத்­தில் பல மாவட்­டங்­களில் தொடர்ந்து மழை பெய்து வரு­கிறது. பிரம்­ம­புத்ரா ஆற்­றில் அபா­யக் கட்­டத்தை தாண்டி வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­கிறது. ஆற்­றங்­க­ரை­யோ­ரம் உள்ள கிரா­மங்­க­ளின் மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பல மாவட்­டங்­களில் கிரா­மங்­கள் தண்­ணீ­ரில் தத்­த­ளிக்­கின்­றன. இது­வரை 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 27 மாவட்­டங்­களில் 6.62 லட்­சத்­துக்­கும் அதி­க­மான மக்­கள் வெள்­ளம் மற்­றும் நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வெள்­ளம் பாதித்த மக்­களை மீட்­கும் பணி­யில் ராணு­வம், துணை ராணுவ படை­கள், அசாம் பேரி­டர் மீட்­புப் படை, தீய­ணைப்பு மற்­றும் அவ­ச­ர­கால சேவை துறை­யைச் சேர்ந்­த­வர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். பெரிய அள­வி­லான நிலச்­ச­ரி­வு­கள் மற்­றும் தேங்­கிய நீர் ஆகி­ய­வற்­றால் தண்­ட­வா­ளங்­கள், பாலங்­கள் மற்­றும் சாலை­கள் உருக் குலைந்­துள்­ளன. இத­னால் போக்கு வரத்து வச­தி­யும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. முகாம்­களில் 48,000 பேர் தங்கியுள்ளனர். மழை வெள்­ளத்­தால் ஹோஜாய், சாசார் மாவட்­டங்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த மாவட்­டங்­களில் மட்­டும் தலா ஒரு லட்­சம் மக்­கள் சிர­மத்தை சந்­தித்து வரு­கின்­ற­னர்.

பொதுமக்கள் மீட்கப்பட்டு பாது காப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 248 நிவாரண முகாம்களில் 48 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் லும்டிங் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சிபு மிஸ்ரா வெள்ளப் பாதிப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட சென்றார். அவருக்காக ரப்பர் படகு தயார் நிலையில் இருந்தது. முழங்கால் வரை சாலையில் தண்ணீர் தேங்கி யிருந்தது. இதை கடந்துதான் எம்எல்ஏ ரப்பர் படகில் ஏற வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து எம்எல்ஏ சிபு மிஸ்ரா மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரரின் முதுகில் தொற்றிக் கொண்டார். அந்த வீரர் தனது முதுகில் எம்எல்ஏவை சுமந்து ரப்பர் படகில் இறக்கினார். இது தொடர் பான காணொளி சமூக ஊடகங் களில் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ சிபு மிஸ்ராவின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.