கார்த்தி முன்னிலையாக உத்தரவு

கார்த்தி முன்னிலையாக உத்தரவு

1 mins read
fdf5527b-e818-49af-b4ce-4842f550157b
-

புதுடெல்லி: ஐம்பது லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று சீன ஊழியர்களுக்கு சட்டவிரோத மாக 'விசா' வாங்கி தந்த தாகக் கூறப்படும் விவகாரத் தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி அவரது ஆடிட்டர் உள்ளிட் டோர் வீடுகளில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் முன்பிணைக் கேட்டு கார்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கார்த்தியை சிபிஐ கைது செய்ய வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவிக்க ேவண்டும் என்றும் வெளிநாட்டில் இருக்கும் அவர், நாடு திரும்பிய பின்னர் 16 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.