புதிய ஊழல் வழக்கு; லாலு, உறவினர் வீடுகளில் சோதனை

பாட்னா: கால்­ந­டை தீவன ஊழல் வழக்­கில் லாலு பிர­சாத் யாதவ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்டு ஒரு வாரமே ஆன நிலை­யில் அவர் மீது புதிய ஊழல் வழக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

மத்­தி­யில் காங்­கி­ரஸ் தலைமை யிலான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அரசு ஆட்­சி­யில் இருந்த போது 2004ஆம் ஆண்­டில் லாலு பிர­சாத் யாதவ் ரயில்வே அமைச் சராகப் பதவி வகித்­தார்.

2004-2009க்கு இடையே ரயில்வே வேலை வழங்­கு­வ­தில் முறை­கேடு நடந்­துள்­ளது என்று அவர் மீது சிபிஐ புதிய வழக்­குப் பதிவு செய்­துள்­ளது. லாலு தவிர அவ­ரது மனைவி முன்­னாள் பீகார் முதல்­வ­ரான ராஃப்ரி தேவி, மகளும் எம்.பி.யுமான மிசா­பார்தி மற்­றும் அவ­ரது உற­வி­னர்­க­ளின் பெயர்­கள் புதிய வழக்­கில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து லாலு பிர­சாத் யாதவ் வீடு, அவ­ரது மகள் மிசா­பா­ரதி வீடு ஆகிய இடங்­களில் நேற்று சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். பீகார் தலை நகர் பாட்­னா­வில் மட்­டும் 4 இடங் களில் இந்­தச் சோதனை நடந்­தது.

மேலும் லாலு பிர­சாத் உற­வி­னர் வீடு­கள், அவ­ரு­டன் தொடர்­பு­டைய அலு­வ­ல­கங்­க­ளி­லும் சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

லாலு பிர­சாத் யாதவ் ரயில்வே அமைச்­ச­ராக இருந்­த­போது ஏற்­கெ­னவே ஹோட்­டல்­க­ளுக்கு உரி­மம் வழங்­கி­ய­தில் முறை­கேடு செய்­த­தாக அவர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்­தது.

உரி­மம் வழங்­கி­ய­தற்கு கைமா­றாக மூன்று ஏக்­கர் நிலத்தை அவ­ரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் வளைத்­த­தா­க­வும் சி.பி.ஐ. குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

இந்த நிலை­யில் ரயில்வே பணி­யி­டங்­க­ளுக்­கான தேர்­வில் முறை­கேடு நடந்­த­தாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­யி­ருக்­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!