செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a77a415b-3b1b-4e96-8c6a-38f214c367b5
-

தோக்­கியோ 'குவாட்' மாநாட்­டில்

பிர­த­மர் மோடி பங்­கேற்கிறார்

புது­டெல்லி: தோக்­கி­யோ­வில் வரும் 24ஆம் ேததி நடை பெறும் 'குவாட்' மாநாட்­டில் பிர­த­மர் மோடி பங்­கேற்­கி­றார்.

இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் ஆகிய நான்கு நாடு­கள் 'குவாட்' எனும் அமைப்­பில் அங்­கம் வகிக்­கின்­றன. இந்த அமைப்­பின் உச்­ச­நிலை மாநாடு, ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் இம்­மா­தம் 24ஆம் தேதி நடை­பெ­று­கிறது. அதில் பிர­த­மர் மோடி கலந்து கொள்­வ­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பக்சி தெரி­வித்­தார்.

"இந்தோ-பசி­பிக் வட்­டார நில­வ­ரம் மற்­றும் பரஸ்­பர நலன் சார்ந்த உலக பிரச்­சி­னை­கள் குறித்து 'குவாட்' தலை­வர்­கள் கருத்து பரி­மாற்­றம் செய்துகொள்ள இம் ­மாநாடு நல்ல வாய்ப்­பாக அமை­யும். ஜப்­பான் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் ஆகி­யோ­ரை பிர­த­மர் மோடி தனித்­த­னி­யாக சந்திக்க விருக்கிறார். ஆஸ்­தி­ரே­லியப் பிர­த­மர் ஸ்காட் மோரி ­ச­னை­யும் திரு மோடி சந்­திக்க வாய்ப்­புள்­ளது," என்று அந்த பேச்சாளர் சொன்னார்.

காஷ்­மீர் பிரி­வி­னை­வாத

தலை­வர் யாசின் குற்­ற­வாளி

புது­டெல்லி: காஷ்­மீர் பிரி­வி­னை­வாதத் தலை­வர் முக­மது யாசின் மாலிக், அவ­ரது கூட்­டா­ளி­கள் மீது டெல்­லி­யில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் பயங்­க­ர­வாத, பிரி­வி­னை­வாத குற்­றச்­சாட்­டு­க­ளு­டன் சட்டவிரோத செயல்­பா­டு­கள் தடுப்பு சட்­டப்­படி வழக்கு தொட­ரப்­பட்­டது.

இந்த வழக்­கில் கடந்த மார்ச் மாதம் யாசின் மாலிக் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­ட­போது அவர் தன் மீதான குற்­றச்­சாட்டை மறுக்­க­வில்லை என தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில் யாசின் மாலிக் குற்­ற­வாளி என என்.ஐ.ஏ. நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் தீர்ப்பு அளித்­தது. அவர் மீதான தண்­டனை விவ­ரம் 25ஆம் தேதி அறி­விக்­கப்­படும்.

இந்த வழக்­கில் லஷ்­கர்-இ-தொய்பா பயங்­க­ர­வாத அமைப்­பின் நிறு­வ­னர் ஹபீஸ் சையத்­தும் ஹிஸ்­புல் முஜாகி­தீன் இயக்­கத்­தின் தலை­வர் சையத் சலா­கு­தீ­னும் தலை­ம­றைவுக் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

விமானத்தில் ரூ.67 லட்சம்

மதிப்புள்ள தங்கம் கடத்தல்

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு வியாழக்கிழமை காலை வந்த இரண்டு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானங்களில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தங்கத்தை உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும், மற்றொருவர் வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இரண்டு பேரிடமும் இருந்து முறையே 814 கிராம், 547 கிராம் என மொத்தம் ஒரு கிலோ 361 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறையினனர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.