சரணடைந்த சித்து சிறையில் அடைப்பு

சரணடைந்த சித்து சிறையில் அடைப்பு

1 mins read
d0f306d2-edb1-40b4-94d0-a2f8b98982b1
-

சண்டிகர்: பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பஞ்சாப்பில் நடந்த சாலை தகராறில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக 34 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உடல்நலம் சரியில்லாததால், சித்து சரணடைவதற்கு கால அவகாசம் கேட்டார் அவரது வழக்கறிஞர் அபிஷேக். அதற்கு, சரணடையும் படி நீதிபதி அறிவுறுத்தினார்.