போலி என்கவுண்டரில் நால்வர் பலி: 10 காவலர்கள் மீது வழக்கு

ஹைத­ரா­பாத்: ஹைத­ரா­பாத்­தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­குத் தொடர்­பில், குற்­றம் சாட்­டப்­பட்ட நால்வரும் போலி என்­கவுண்­ட­ரில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக விசா­ரணை ஆணை­யம் அறிக்கை தாக்­கல் செய்­துள்­ளது.

இளை­யர்­க­ளைச் சுட்­டுக் கொன்ற 10 காவ­லர்­கள் மீது கொலை வழக்­குப் பதி­ய­வும் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்ள நிலை­யில், இவர்­கள் அனைவரும் விரை­வில் கைது செய்­யப்­படுவார்­கள் என­ எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தெலுங்­கானா மாநி­லம், ேடாண்­டுப்­பள்­ளி­யில் உள்ள சுங்­கச் சாவடி அருகே கடந்த 2019ல் 27 வய­தான கால்­நடை மருத்­து­வர் திஷா, கூட்­டுப் பாலி­யல் பலாத்­கா­ரம் ெசய்­யப்­பட்டு, கொடூ­ர­மான முறை­யில் உயி­ரோடு எரித்­துக் கொல்­லப்­பட்­டார்.

இந்த வழக்­கில் தொடர்­பு­டைய நான்கு இளை­யர்­களை ஹைத­ரா­பாத் காவல்­து­றை­யி­னர் 24 மணி நேரத்­திற்­குள் கைது செய்­த­னர்.

அதன்­பின்­னர், 2019 டிசம்­பர் 6ஆம் ேததி குற்­றம் நடந்த இடத்­தில் தட­யங்­க­ளைச் சேக­ரிப்­ப­தற்­காக அவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், தப்ப முயன்­ற­தா­கக் கூறி அவர்களை என்­க­வுண்­டர் செய்­த­னர்.

ஆனால், இது போலி என்­கவுண்டர் என ஹைத­ரா­பாத் உயர் நீதி­மன்­றம், உச்ச நீதி­மன்­றங்­களில் வழக்­கு­கள் தொட­ரப்­பட்­ட­தால், மூவர் கொண்ட விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து உச்ச நீதி­மன்­றத்­தால் அமைக்­கப்­பட்ட நீதி­பதி சில்­புர்­கர் ஆணை­யம் விசா­ரணை நடத்தி வந்த நிலை­யில், “இது போலி என்­க­வுண்­டர்­தான். உதவி ஆணை­யர் உள்­ளிட்ட 10 காவ­லர்­கள் திட்­ட­மிட்டு குற்­ற­வா­ளி­களைக் கொன்­றுள்ளனர்,” என நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

காவ­லர்­கள் தரப்­பில் இந்­தக் குற்­றச்­சாட்டை மறுத்­தா­லும் அதற்­கான ஆதா­ரங்­கள் இல்லை என்பதால் அவர்­கள் மீது வழக்­குப் பதியப்பட உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!