மழை, வெள்ளம், நிலச்சரிவு, மின்னல்: 58 பேர் உயிரிழப்பு

கௌஹாத்தி: வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளி­லும் பீகா­ரி­லும் நீடித்து வரும் கன­ம­ழை­யால் பொதுமக்­க­ளின் அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மழை, வெள்­ளம், நிலச்­ச­ரிவு, மின்­னல் தாக்கி இது­வரை 58 பேர் உயி­ரி­ழந்­துவிட்ட­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஒரு வாரத்­துக்­கும் மேலாக அசாம், அரு­ணாச்­சலப் பிர­தே­சம், மேகா­லயா, மணிப்­பூர், சிக்­கிம், திரி­புரா, நாகா­லாந்து ஆகிய ஏழு வட­கி­ழக்கு மாநி­லங்­களில் கன­மழை நீடித்து வரு­கிறது.

இதே­போல் பீகார், மேற்­கு­வங்­கம் உள்­ளிட்ட கிழக்கு மாநி­லங்­க­ளை­யும் மழை விட்­டு­வைக்­க­வில்லை. அசா­மில் மட்­டும் 800,000 பேர் மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளைப் பொறுத்­த­வரை சுமார் ஒரு மில்லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் மழை, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அம்­மா­நில அர­சு­கள் மீட்பு, நிவா­ர­ணப் பணி­களை துரி­தப்­ப­டுத்தி உள்­ளன.

அசாம் நில­வ­ரம்

அசா­மில் உள்ள 35 மாவட்­டங்­களில் தற்­போது 32 மாவட்­டங்­களில் வெள்­ளப்­பெ­ருக்கு, நிலச்­ச­ரி­வுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன. கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் 14 பேர் பலி­யா­னதை அடுத்து, மொத்த பலி எண்­ணிக்கை 18ஆக உயர்ந்­துள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் 234 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, அ­சா­மில் நாளை வரை கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

பிரம்­ம­புத்­திரா நதி­யில் வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­வ­தால், கரை­யோ­ரப் பகு­தி­களில் உடைப்பு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் கரை­யோரக் கிரா­மங்­கள் பல வெள்­ளத்­தில் மூழ்கி உள்­ளன.

இந்­நி­லை­யில் மழை நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் சேதங்­கள் அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

அரு­ணாச்­சலப் பிர­தே­சத்­தில் வெள்­ளம், நிலச்­ச­ரி­வால் எட்டு பேரும் மேகா­ல­யா­வில் மூன்று பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர். வட­கி­ழக்கு மாநி­லங்­களில் மட்­டும் பலி எண்­ணிக்கை 25ஆக அதி­க­ரித்­துள்­ளது. நிலச்­ச­ரி­வால் வட­கி­ழக்கு மாநி­லங்­களில் மின் விநி­யோ­கம் தடை­ப்பட்­டுள்­ளது. பல பகு­தி­களில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பீகார் நில­வ­ரம்

பீகார் மாநி­லத்­தில் மொத்­தம் உள்ள 38 மாவட்­டங்­களில் 16 மாவட்­டங்­களை மழை புரட்டிப் போட்­டுள்­ளது. அங்கு ஒரே நாளில் மின்­னல் தாக்கி 33 பேர் மாண்டு­விட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மழை, வெள்­ளத்­தால் உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு அம்­மா­நில அரசு தலா ரூ.4 லட்சம் இழப்­பீடு வழங்­கப்­படும் என அறி­வித்­துள்­ளது. மின்­னல் தாக்கி உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்­குப் பிர­த­மர் மோடி இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

அசா­மில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் மனநிறைவு தருவதாகவும் கூறியுள்ளார்.

மின்­னல் தாக்கி இறப்­போர் அதிகரிப்பு

இதற்­கி­டையே, நாட்­டில் மின்­னல் தாக்கி பலி­யா­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக புள்ளிவிவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. கடந்த 2018ஆம் ஆண்டு 2,356 பேரும் 2019ஆம் ஆண்டு 2,876 பேரும் மின்­னல் தாக்கி பலி­யா­கி­னர். மேலும், 2001 முதல் 2018ஆம் ஆண்டு வரை 42,500 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

வடகிழக்கு மாநிலங்களிலும் பீகாரிலும் தொடர் மழை; அசாமில் 800,000 பேர் பாதிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!