தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்தில் 10 பேர் மரணம்

1 mins read
e30d6f90-892d-48b2-af0b-9761e75136f5
-

ஸ்ரீந­கர்: சுரங்­கப்­பாதை விபத்­தில் சிக்­கிய பத்து தொழி­லா­ளர்­களை ஜம்மு தீய­ணைப்பு, மீட்­புப் படை­யினர் சட­ல­மாக மீட்­டுள்­ள­னர். அங்கு மீட்­புப் பணி­கள் 36 மணி நேரத்­துக்­கும் மேலாக நீடித்­தது.

ராம்­பன் மாவட்­டத்­தில் உள்ள ஸ்ரீந­கர், ஜம்மு நெடுஞ்­சா­லை­யில் சுரங்­கப்­பாதை அமைக்­கும் பணி தற்­போது நடை­பெற்று வரு­கிறது.

இதற்­கான கட்­டு­மா­னப் பணி­கள் துரித கதி­யில் நடந்து வரும் நிலை­யில் வியா­ழக்­கி­ழமை இரவு இப்­ப­கு­தி­யில் திடீர் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது.

இத­னால் சுரங்­கப்­பா­தை­யின் ஒரு பகுதி இடிந்து விழுந்­த­தில் தொழி­லா­ளர்­கள் பலர் இடி­பா­டு­களில் சிக்­கிக்கொண்­ட­னர். அவர்­களை மீட்­கும் பணி உட­ன­டி­யா­கத் தொடங்­கி­யது. எனி­னும் வெள்­ளிக்­கி­ழமை இர­வு மீண்­டும் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தால் மீட்­புப் பணி பாதிக்­கப்­பட்­டது.

கூடு­தல் பாது­காப்­பு­டன் மீட்­புப் பிரிவு வீரர்­கள் செயல்­பட்­ட­னர். இடி­பா­டு­களில் சிக்­கிய மூன்று தொழி­லா­ளர்­கள் படு­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்­ட­னர். பத்து தொழி­லா­ளர்­க­ளின் சட­லங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இவர்­களில் பத்து பேர் மேற்­கு­வங்க மாநிலத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர். நேப்­பா­ளத்­தைச் சேர்ந்த இரு­வர், அசாம் மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு­வர், காஷ்­மீ­ரைச் சேர்ந்த இரு­வர் இந்த விபத்­தில் மாண்­டு­விட்­ட­னர். மீட்­புப்­பணி நேற்­றும் நீடித்­தது.

இதற்­கி­டையே உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.16 லட்­சம் நிவா­ர­ணம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.