பெட்ரோல் விலை குறைப்பு: சமையல் எரிவாயுவுக்கு மானியம்

புது­டெல்லி: பெட்­ரோல், டீசல் விலையை மத்­திய அரசு அதி­ர­டி­யா­கக் குறைத்­துள்­ளது. இதற்கு பொது­மக்­கள் மத்­தி­யில் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்­ட­ருக்கு ரூ.7 என்ற அள­வில் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தி­னம் மத்­திய அரசு அறி­வித்­தது. மேலும் சமை­யல் எரி­வாயு உரு­ளை­க­ளுக்கு ரூ.200 மானி­யம் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக பெட்­ரோல், டீசல் விலை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் இருந்­தது. இத­னால் ஒரு லிட்­டர் பெட்­ரோ­லின் விலை நூறு ரூபா­யைக் கடந்­தது. இத­னால் மக்­கள் கடும் அதி­ருப்­தி­யில் இருந்து வந்­த­னர்.

மாநில அர­சு­கள் வரி­யைக் குறைத்­தால் விலை குறை­யும் என மத்­திய அரசு தெரி­வித்­தது. ஆனால் மாநில அர­சு­கள், அது சாத்­தி­ய­மில்லை எனக் கைவிரித்து­விட்­டன. பாஜ­க­வும் அதன் கூட்டணிக் கட்­சி­களும் ஆளும் மாநி­லங்­களில் பெட்­ரோல், டீசல் மீதான உள்­ளூர் வரி குறைக்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக அம்­மா­நி­லங்­களில் விற்­பனை விலை கணி­ச­மா­கக் குறைந்­தது.

கடந்த நவம்­பர் மாதம் தீபா­வளி பண்­டி­கை­யை­யொட்டி பெட்­ரோல் மீதான உற்­பத்தி வரியை லிட்­ட­ருக்கு ஐந்து ரூபாய், டீசல் மீதான உற்­பத்தி வரியை 10 ரூபாய் என்ற அள­வில் குறைத்து மத்­திய அரசு அறி­விப்பு வெளி­யிட்­டது. இது மத்­திய அர­சின் தீபா­வ­ளிப் பரிசு என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், உக்­ரேன், ரஷ்ய போர் கார­ண­மாக அனைத்­து­லக விநி­யோ­கச் சங்­கிலி பாதிக்­கப்­பட்­டதை அடுத்து கடந்த மார்ச் இறு­தி­யில், 137 நாள்­க­ளுக்­குப் பின்­னர் பெட்­ரோல், டீசல் விலை மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்கியது. இதன் எதி­ரொ­லி­யாக அத்­தி­யாவசி­யப் பொருள்­க­ளின் விலை­யும் அதிகரிக்­கத் தொடங்­கின.

கடந்த மாத இறு­தி­யில் மாநில முதல்­வர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது பெட்­ரோல், டீசல் விலை உயர்வு குறித்­தும் விவா­திக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், விலை குறைப்பு தொடர்­பாக மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு பதி­விட்­டார்.

அதில், ஏழைப் பெண்­க­ளுக்­கான உஜ்­வாலா கியாஸ் எரி­வாயு உருளைத் திட்­டத்­தின் கீழ் ஓர் எரி­வாயு உரு­ளைக்கு இரு­நூறு ரூபாய் மானி­யம் வழங்­கப்­படும் என்­றும் இதன் மூலம் ஒன்­பது கோடி பேர் பல­ன­டை­வார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

வரி குறைப்­பால் மத்­திய அர­சுக்கு ஆண்­டுக்கு ரூ.1 லட்­சம் கோடி வரு­வாய் இழப்பு ஏற்­படும் என்­றும் சமை­யல் எரி­வாயு உரு­ளைக்­கான மானி­யத்­தால் ஆண்­டுக்கு ரூ.6,100 கோடி கூடு­த­லாக செல­வா­கும் என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, பெட்­ரோல் மீதான வரியை மத்­திய அரசு குறைப்­ப­தற்கு முன்பே கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் தமி­ழக அரசு குறைத்­து­விட்­ட­தாக தமி­ழக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

இதன் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் பெட்­ரோல் விலை மூன்று ரூபாய் குறைந்­த­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­உள்­ளார். மத்­திய அரசு பெட்­ரோல் விலையைக் குறைத்­தி­ருப்­ப­தால் தமி­ழ­கத்­துக்கு 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!