சிறையில் சித்து: முதல் நாள் தூக்கமின்றித் தவிப்பு

சண்டிகர்: கொலை வழக்­கில் கைதாகி உள்ள முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரும் பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் தலை­வ­ரு­மான நவ்­ஜோத் சிங் சித்து (படம்) சிறை­யில் தூக்­க­மின்­றித் தவித்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

கடந்த 1987ஆம் ஆண்டு சாலை­யில் நடந்த சண்­டை­யில் ஒரு­வரை அடித்­துக் கொன்­ற­தாக சித்து மீது வழக்­குப் பதி­வா­னது.

இந்த வழக்­கில், அவ­ருக்கு உச்ச நீதி­மன்­றம் ஓராண்டு சிறைத்­தண்டனை விதித்து கடந்த 20ஆம் தேதி தீர்ப்­ப­ளித்­தது. இதை­ய­டுத்து பாட்­டி­யாலா நீதி­மன்­றத்­தில் அவர் சரண் அடைந்­தார். பின்­னர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், சிறை­யில் கைதி­க­ளுக்­கான வெள்ளை நிற ஆடை­யில் காணப்­படும் சித்­து­வுக்கு வழக்­க­மான மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் பத்­தாம் எண் கொண்ட சிறை அறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

"சித்­து­வுக்கு கைதி எண் 137,683 ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அடைக்­கப்­பட்­டுள்ள அறை­யில் மொத்­தம் நான்கு கைதி­கள் உள்­ள­னர்.

"சிறை­யில் அடைக்­கப்­படும் முன்­பா­கவே அவர் இரவு உணவை சாப்­பிட்­டு­விட்­டார். அத­னால், சிறை­யில் இரவு அளித்த உணவை அவர் சாப்­பி­ட­வில்லை. மேலும், இரவு முழு­வ­தும் தூங்­கா­மல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்­டி­ருந்­­தார்," என்று ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இனி சிறைக்கைதி என்­கிற வகை­யில் சித்து தின­மும் காலை 5.30 மணிக்கு எழ வேண்­டும். தண்­ட­னைக் கைதி­கள் தின­மும் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்­டும். அதற்கு நாள்­தோ­றும் ரூ.30 முதல் ரூ.90 வரை ஊதி­யம் வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!