கர்நாடகாவில் ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பெங்களூரு: கர்­நா­ட­கா­வில் நீடித்து வரும் கன­ம­ழையை அடுத்து அங்கு ஆறு மாவட்­டங்­க­ளுக்கு பலத்த மழைக்­கான சிவப்பு எச்­சரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த நான்கு நாள்­க­ளுக்கு மழை நீடிக்க வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

தென்­னிந்­திய மாநி­லங்­களில் அண்­மைய சில தினங்­க­ளாக கோடை மழை பெய்து வரு­கிறது. குறிப்­பாக, கர்­நா­ட­கா­வில் பர­வ­லா­கப் பெய்து வரும் மழை­யால், உத்­தர கன்­னடா, உடுப்பி, தட்­சிண கன்­னடா, தாவ­ண­கெரே, சிவ­மொக்கா, சிக்­க­ம­க­ளூரு ஆகிய ஆறு மாவட்­டங்­கள் பாதிக்­கப்­பட்டுள்­ளன.

கடந்த இரு தினங்­க­ளாக அங்கு மழைப்­பொ­ழிவு குறைந்­தி­ருந்த நிலை­யில், அடுத்த நான்கு நாள்­க­ளுக்கு ஆறு மாவட்­டங்­க­ளி­லும் பலத்த மழை பெய்­யும் என சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், பொது­மக்­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்றும் தகுந்த கார­ணங்­கள் இன்றி வெளியே செல்ல வேண்­டாம் என்­றும் அம்­மாநில அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் பல லட்­சம் ஹெக்­டர் பயிர்­கள் வெள்­ளத்­தில் மூழ்கி உள்­ளன. இத­னால் விவ­சா­யி­கள் பெரும் நஷ்­டத்தை எதிர்­நோக்கி உள்­ள­னர். துங்­க­பத்ரா ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது. இத­னால் கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் பாது­காப்­பான இடங்­களுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தாவ­ண­கெரே பகு­தி­யில் நீடித்து வரும் கன­ம­ழை­யால் சுமார் இரு­நூறு வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. ஏரா­ள­மான வீடு­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. அங்­கி­ருப்­ப­வர்­களை மீட்­கும் பணி நடை­பெற்று வரு­கிறது.

இதற்­கி­டையே, காவி­ரி­யில் தமி­ழ­கத்­துக்கு விநா­டிக்கு 7,500 கன அடி நீர் திறக்­கப்­பட்­டுள்­ளது. காவிரி நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் பலத்த மழை பெய்து வரு­கிறது. குடகு, மைசூரு, ஷிமோகா, பெங்­களூரு உள்­ளிட்ட மாவட்­டங்­களில் கடந்த இரு வாரங்­க­ளாக கன­மழை பெய்து வரு­வ­தால் காவிரி, கபிலா ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கிறது.

இதன் எதி­ரொ­லி­யாக கிருஷ்ண­ராஜ சாகர், கபினி அணை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன. கோடைக் காலத்­தில் அணை­கள் நிரம்­பு­வது மக்­க­ளுக்கு மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!