விஸ்மயா வரதட்சணை வழக்கு: கணவருக்கு பத்தாண்டு சிறை

விஸ்மயா வரதட்சணை வழக்கு: கணவருக்கு பத்தாண்டு சிறை

2 mins read
4872451c-151c-451b-a642-07a628985570
கிரண்குமார், விஸ்மயா. படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­திய விஸ்­மயா வழக்­கில் நேற்று தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

விஸ்­மயா தன் உயிரை மாய்த்­துக்­கொள்ள அவ­ரது கண­வர் கிரண்­ கு­மார்­தான் கார­ணம் என்று தீர்ப்­ப­ளித்த கொல்­லம் கூடு­தல் நீதி­மன்­றம், அவ­ருக்கு பத்து ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யும் 12 லட்­சம் ரூபாய் அப­ரா­த­மும் விதித்­துள்­ளது.

கேரள மாநி­லத்­தில் கடந்த சில ஆண்­டு­க­ளாக வர­தட்­ச­ணைப் புகார்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இளம் பெண்­கள் திரு­ம­ணத்­துக்­குப் பின் வர­தட்­ச­ணைக் கொடு­மை­க­ளுக்கு ஆட்­ப­டு­வ­தும் உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தும் அதி­க­ரித்து வரும் பட்­சத்­தில், இத்­த­கைய புகார்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க காவல்­து­றைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கொல்­லம் பகுதி­யைச் சேர்ந்த விஸ்­மயா நாயர் என்ற இளம் பெண், அரசு ஊழியரான தனது கண­வர் கிரண் குமார் வீட்­டில் மர்­ம­மான முறை­யில் இறந்து ­கி­டந்­தது பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யது.

ஆயுர்­வேத மருத்­து­வம், அறுவை சிகிச்சை தொடர்­பான இளங்­கலை மருத்­து­வப் படிப்பை மேற்­கொண்டு வந்த, 22 வய­தான விஸ்­மயா, வர­தட்­ச­ணைக் கொடுமை கார­ண­மாக தன் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தாக அவ­ரது பெற்­றோர் புகார் எழுப்­பி­னர்.

இதை­ய­டுத்து, கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கிரண்­ கு­மார் கைதா­னார். வழக்கு விசா­ர­ணை­யின்­போது விஸ்­மயா இறப்­ப­தற்கு சில நாள்­க­ளுக்கு முன்­னர் தமது உற­வி­ன­ருக்கு அனுப்­பிய சில புகைப்­ப­டங்­கள் மூலம் அவ­ரது உட­லில் பல காயங்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது.

இந்­நி­லை­யில், தங்­க­ளது மக­ளின் மர­ணத்­துக்கு கிரண்­குமா­ரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் கார­ணம் என விஸ்­ம­யா­வின் பெற்­றோர் குற்­றம்­சாட்­டி­னர்.

திரு­ம­ணத்­தின்­போது நூறு பவுன் தங்க நகை­களும் 11 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள காரும் நில­மும் வர­தட்­ச­ணை­யாக தரப்­பட்­ட­தாக தெரி­வித்த விஸ்­ம­யா­வின் பெற்­றோர், அதன்­பி­ற­கும் கூடு­தல் வர­தட்­சணை கேட்டு கிரண் குமார் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பிட்­ட­னர்.

மேலும், விஸ்­ம­யாவை பல­முறை கிரண் குமார் அடித்து துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஒரு­முறை காவல்­துறை தலை­யிட்டு சமா­தா­னப்­ப­டுத்­தும் அள­வுக்கு பிரச்­சினை பெரி­தா­கி­யது என்­றும் அந்­தச் சம­யத்­தி­லும்­கூட மனை­வியை கிரண் குமார் பிறந்த வீட்­டுக்கு அனுப்­ப­வில்லை என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விஸ்­ம­யா­வின் உடல் கண­வர் வீட்­டில் குளி­ய­ல­றை­யில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்­டது. அவர் தூக்­கிட்டு உயிரை மாய்த்­துக் கொண்­ட­தாக கூறப்­பட்ட நிலை­யில், மர்ம மர­ணம் என்று குறிப்­பிட்டு காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­தது.

மருத்­து­வம் படித்து வந்த 22 வயது இளம் பெண் வர­தட்­ச­ணைக் கொடு­மைக்கு ஆளாகி உயி­ரிழந்­தது கேர­ளா­வில் கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. கிரண் குமா­ருக்கு கடும் தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டும் என்று பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்­தி­னர்.

இந்­நி­லை­யில், இறப்­ப­தற்கு முன்பு விஸ்­மயா தன் தந்­தை­யைத் தொடர்­பு­கொண்டு கண்­ணீர் மல்க பேசி­யுள்­ளார். அதை முக்­கிய ஆதா­ர­மா­கக் கருதி, அதன் அடிப்­ப­டை­யில் கிரண் குமா­ருக்கு சிறைத்­தண்­டனை விதித்து நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

22 வயது மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: ரூ.12 லட்சம் அபராதமும் விதிப்பு