பஞ்சாப் மாநிலத்தில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் சதி: உளவுத்துறை தகவல்

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­தில் பயங்­க­ர­வா­தச் செயல்­களை அரங்­கேற்க பாகிஸ்­தான் உளவு அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக இந்­திய உள­வுத்­துறை மத்­திய அரசை எச்­ச­ரித்­துள்­ளது.

பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள ரயில் தண்­ட­வா­ளங்­க­ளைத் தகர்ப்­ப­தன் மூலம் மிகப்­பெ­ரிய அள­வில் உயிர், பொருள் சேதங்­களை ஏற்­படுத்­து­வதே பாகிஸ்­தான் உளவு அமைப்­பான ஐஎஸ்ஐ-யின் நோக்­கம் என­வும் இந்­திய உள­வுத்­துறை கூறி­யுள்­ளது.

மேலும், பஞ்­சாப் மாநி­லத்தைச் சுற்­றி­யுள்ள எல்­லை­யோ­ரப் பகுதி­களி­லும் இதே­போன்ற சதித்­திட்­டத்தை அரங்­கேற்ற பாகிஸ்­தான் தரப்­பில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக தெரிய வந்­துள்­ளது.

இந்த பயங்­க­ர­வாதத் தாக்கு­தல் திட்­டத்­தில் பாகிஸ்­தான் உளவு அமைப்­புக்கு காலிஸ்­தான் அமைப்பும் அந்­நாட்­டுக்­காக இந்தியா­வில் அடை­யா­ளம் தெரி­யாத வகை­யில் செயல்­படும் உள­வா­ளி­களும் உதவ இருப்­ப­தாக இந்­திய உள­வுத்­துறை கூறி­யுள்­ளது.

மேலும், காலிஸ்­தான் அமைப்­பி­ன­ருக்­கும் உள­வா­ளி­க­ளுக்­கும் பெரிய அள­வில் பண விநி­யோ­கம் நடந்­தி­ருப்­பது உள­வுத்­துறை விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, பஞ்­சாப், ஹரி­யானா, ராஜஸ்­தான் மாநி­லங்­களில் உள்ள அனைத்து ரயில் தண்­ட­வா­ளப் பகு­தி­களில் சுற்­றுக்­கா­வல் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இம்­முறை பயங்­க­ர­வா­தி­கள் சரக்கு ரயில்­க­ளை­யும் குறி­வைத்து சதிச் செயல்­களில் ஈடு­பட வாய்ப்பு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பஞ்­சாப் மட்­டு­மல்­லா­மல், அதன் அண்டை மாநி­லங்­க­ளி­லும் ரயில் தண்­ட­வா­ளங்­கள் தீவிர கண்­கா­ணிப்­பின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

சந்­தே­கத்­துக்­கு­ரிய நட­மாட்­டங்­கள் தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என மாநில காவல்­து­றை­யி­ன­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் பிற எல்­லைப் பகு­தி­க­ளி­லும் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!