குரங்கம்மையை எதிர்கொள்ள மகாராஷ்டிரா, கேரளாவை உஷார்ப்படுத்திய மத்திய அரசு

குரங்கம்மையை எதிர்கொள்ள மகாராஷ்டிரா, கேரளாவை உஷார்ப்படுத்திய மத்திய அரசு

2 mins read
79c5cb83-a1f9-4f4b-aa2f-d8dbe2815683
-

புது­டெல்லி: குரங்­கம்மை குறித்து உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்ள நிலை­யில், மகா­ராஷ்­டிரா, கேரள மாநி­லங்­களை மத்­திய அரசு உஷார்ப்படுத்தி உள்­ளது.

கொரோனா தொற்­றுப் பர­வ­லின்­போது இவ்­விரு மாநி­லங்­க­ளி­லும் அதிக எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­கள் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து, இம்­முறை முன்­கூட்­டியே மத்­திய அரசு எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் இது­வரை குரங்­கம்மை பாதிப்பு கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்ற போதி­லும், மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

தேசிய நோய் தடுப்பு மையம், இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் ஆகி­ய­வற்றை தொடர் கண்­காணிப்­பில் இருக்­கு­மாறு மத்­திய சுகா­தார அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

"மும்பை நக­ரில் 28 படுக்­கை­கள் கொண்ட தனித்­தனி வார்­டு­களை மும்பை மாந­க­ராட்சி அமைத்து தயார் நிலை­யில் உள்­ளது. இந்­தத் தொற்று பாதித்­த­வர்­கள் ஐந்து முதல் 21 நாள்­கள்­வரை பாதிப்­புக்­கான அறி­கு­றி­களை அனு­ப­விக்க நேரி­ட­லாம். எனவே தீவிர கண்­கா­ணிப்பு தேவை," என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­டவ்யா தெரி­வித்­துள்­ளார்.

மேலும் குரங்­கம்மை தொற்று தொடர்­பான வழி­காட்டி நெறி­முறை­க­ளை­யும் மாநில அர­சு­களுக்கு மத்­திய சுகா­தார அமைச்சு அனுப்­பி­யுள்­ளது.

இறந்­தோர் எண்­ணிக்கை:

இந்­தியா கண்­ட­னம்

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்தி உலக சுகா­தார அமைப்பு அறிக்கை வெளி­யிட்­ட­தற்கு இந்­தியா மீண்­டும் தன் கண்­ட­னத்தை தெரி­வித்­துள்­ளது.

ஜெனீ­வா­வில் நடை­பெற்ற அனைத்­து­லக சுகா­தார மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய மத்­திய அமைச்­சர் மன்­சுக் மாண்­டவ்யா, இந்­தி­யா­வில் 4.5 மில்­லி­யன் பேர் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­தி­ருக்­கக் கூடும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­தது வருத்­தம் அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­திய அரசு தயா­ரித்­துள்ள மிகத் துல்­லி­ய­மான புள்ளி விவ­ரங்­களை உலக சுகா­தார அமைப்பு ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் தனி­யார் அமைப்­பு­க­ளின் துல்­லி­ய­மற்ற தக­வல்­களை நம்­பக்­கூ­டாது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், உலக சுகா­தார அமைப்­பின் புள்ளி விவ­ரத்­துறை தொழில்­நுட்ப இயக்­கு­ந­ரான வில்­லி­யம், இந்­தி­யா­வின் கோரிக்­கையை ஏற்க மறுத்­து­விட்­டார்.

தங்­க­ளுக்­குக் கிடைத்­துள்ள தர­வு­க­ளின்­படி இந்­தி­யா­வில் அதிக உயி­ரி­ழப்­பு­கள் நேர்ந்து இருப்­ப­தாக அவர் திட்டவட்டமாகத் தெரி­வித்­துள்­ளார்.