பேருந்து, லாரி மோதி விபத்து: ஒன்பது பேர் பலி

பேருந்து, லாரி மோதி விபத்து: ஒன்பது பேர் பலி

1 mins read
e0b64d5a-a01f-40f7-8147-87c790fb17ba
-

பெங்களூரு: தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அந்த சொகுசுப் பேருந்து, நள்ளிரவு வேளையில் தானேபுரம் என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியது. இதில் லாரி, பேருந்து ஓட்டுநர்களும் அவர்களுடைய உதவியா ளர்களும் இரண்டு பயணி களும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட மேலும் மூவர் பின்னர் இறந்துவிட்டனர்.