ஊழல் செய்த அமைச்சரை நீக்கிய பஞ்சாப் முதல்வர்

ஊழல் செய்த அமைச்சரை நீக்கிய பஞ்சாப் முதல்வர்

2 mins read
47481684-76a0-492e-827c-d3e88349dba7
-

சண்­டி­கர்: ஊழல் குற்­றச்­சாட்­டில் சிக்­கி­யுள்ள சுகா­தார அமைச்­சர் விஜய் சிங்­லாவை தமது அமைச்­ச­ர­வை­யில் இருந்து அதி­ர­டி­யாக நீக்கி உள்­ளார் பஞ்­சாப் முதல்­வர் பக­வந்த் மான். இதை­ய­டுத்து விஜய் சிங்லா அம்­மா­நில காவல்­து­றை­யால் அதி­ரடி­யா­கக் கைது செய்­யப்­பட்­டார்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் தற்­போது ஆம் ஆத்மி ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. அங்கு புதிய அரசு பொறுப்­பேற்று இரண்டு மாதங்­களே ஆகின்­றன.

ஊழ­லுக்கு எதி­ராக குரல் கொடுத்­த­தால்­தான் ஆம் ஆத்­மி­யால் வெற்­றி­பெற முடிந்­தது என அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கருது­கின்­ற­னர். இந்­நி­லை­யில் அம்­மாநில சுகா­தா­ரத் துறை அமைச்­ச­ரான விஜய் சிங்லா ஊழ­லில் ஈடு­பட்­ட­தாக புகார் எழுந்­துள்­ளது.

தமது துறை சார்ந்த ஒப்­பந்தப் புள்­ளி­கள் கோரு­வது, கொள்­மு­தல் ஆகி­யவை தொடர்­பில் அவர் லஞ்­சம் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து அவ­ரி­டம் விசா­ரணை நடை­பெற்­ற­தா­க­வும் அவர் தவறை ஒப்­புக்­கொண்­ட­தால் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தா­க­வும் அம்­மா­நில முதல்­வர் பக­வந்த் மான் தெரி­வித்­துள்­ளார்.

தமது ஆட்­சி­யில் ஒரு ரூபாய் மதிப்­பி­லான முறை­கே­டு­க­ளைக்­கூட அனு­ம­திக்க இய­லாது என அவர் கூறி­னார்.

"ஆம் ஆத்மி அரசு ஊழலை பொறுத்­துக்கொள்­ளாது. டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கடந்த 2015ஆம் ஆண்டு தனது உணவு, வழங்­கல் துறை அமைச்­சரைப் பதவி நீக்­கம் செய்து வழக்கை சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைத்­தார்.

"அதே வழியை நானும் பின்­பற்­று­கி­றேன். பஞ்­சாப் மாநி­லத்தை ஊழ­லற்ற மாநி­ல­மாக மாற்ற விரும்பு­கி­றேன்," என்று முதல்­வர் பக­வந்த் மான் கூறி­யுள்­ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்த ஊழலை முதல்வர்தான் முதலில் கண்டுபிடித்ததாகவும் அதன் பிறகே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது என்றும் தெரியவந்துள்ளது.