ஸ்பைஸ்ஜெட் கணினி அமைப்பை முடக்க இணைய ஊடுருவிகள் முயற்சி

ஸ்பைஸ்ஜெட் கணினி அமைப்பை முடக்க இணைய ஊடுருவிகள் முயற்சி

1 mins read
269a31bc-506f-426b-80f0-5823ba42ac9e
-

புது­டெல்லி: ஸ்பைஸ்­ஜெட் விமான நிறு­வ­னத்­தின் கணினி அமைப்பை இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வந்­த­தால் அந்­நி­று­வ­னத்­தின் விமா­னச் சேவை­களில் பாதிப்பு ஏற்­பட்­டது.

எனி­னும் ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளின் முயற்­சியை அந்­நி­று­வ­னத்­தின் தக­வல் தொழில்­நுட்­பப் பிரிவு முறி­ய­டித்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னத்­தின் கணினி அமைப்பை சீர்­கு­லைக்­கும் முயற்சி நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்­றது. இந்த இணைய வழி ஊடு­ரு­வ­லால் நேற்று காலை அந்­நி­று­வ­னத்­தின் விமா­னச் சேவை­யில் தாம­தம் ஏற்­பட்­டது. நேற்று காலை விமா­னங்­கள் தாம­த­மா­னதை அடுத்து பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

மேலும், இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் 'ரேன்­சம்­வேர்' என்ற முறை­யைப் பின்­பற்றி இந்த ஊடு­ரு­வல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தும் தெரி­ய­வந்­தது.

'ரேன்­சம்­வேர்' தாக்­கு­தல் என்­பது குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தின் செய­லியை தாக்கி கணினி அமைப்பை முடக்­கு­வ­தா­க­வும் இத­னால் நிறு­வன ஊழி­யர்­க­ளால் எந்­தத் தக­வ­லை­யும் பார்க்­கவோ, கையா­ளவோ இய­லாது. இத­னால் கணினி சார்ந்த எந்­தப் பணி­யும் நடை­பெ­றாது.

எனவே மீண்­டும் தக­வல்­க­ளைக் கையாள வேண்­டும் எனில் தொழில்­நுட்ப ரீதி­யில் இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­களை முறி­ய­டிக்க வேண்­டும். இல்­லை­யெ­னில் அவர்­கள் கேட்­கும் தொகை­யைத் தர வேண்­டி­யி­ருக்­கும்.

இத்­த­கைய சூழ­லைத்­தான் ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னம் நேற்று எதிர்­கொண்­டது. எனி­னும் இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளின் இந்த முயற்­சியை தங்­க­ளது தக­வல் தொழில்­நுட்­பப் பிரிவு முறி­ய­டித்­து­விட்­ட­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

இந்த பிரச்­சினை கார­ண­மாக ஸ்பைஸ்­ஜெட் விமா­னங்­கள் நேற்று காலை புறப்­ப­டு­வ­தில் சிறி­த­ளவு தாம­தம் ஏற்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.