நான்கு மலைகள் மீதேறி சாதித்த பெண்

நான்கு மலைகள் மீதேறி சாதித்த பெண்

1 mins read
2ad07e7f-d7ce-492e-adf3-7e913318c5eb
மலையேற்ற வீராங்கனை எம்.எஸ்.கவுர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: ஒரே மாதத்தில் எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார் இளம் மலையேற்ற வீராங்கனை எம்.எஸ். கவுர்.

27 வயதான இவர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையையும் வெற்றிகரமாக ஏறி முடித்துள்ளார் எம்.எஸ்.கவுர்.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்தடுத்து அன்னபூர்ணா, கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட் சிகரம், லோட்சே மலை என அடுத்தடுத்து எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகளிலும் ஏறி சாதனை படைத்துள்ளார் எம்.எஸ்.கவுர்.

இதற்­கி­டையே, கேர­ளா­வின் இடுக்கி மாவட்ட வளர்ச்சி ஆணை­யர் அர்­ஜூன் பாண்­டி­யன் என்­ப­வர், உத்தரகாண்ட் மாநி­லத்­தில் உள்ள 5,760 மீட்­டர் உய­ரம் கொண்ட திரெ­ள­பதி காதண்டா 2 சிக­ரத்­தில் ஏறி சாதனை படைத்­துள்­ளார். எவ­ரெஸ்ட் உள்­பட பல்­வேறு சிக­ரங்­களில் ஏறி இந்­திய தேசியக் கொடியை நட வேண்­டும் என்­பது தமது லட்­சி­யம் என அவர் தெரி­வித்­துள்­ளார்.