மாவட்டப் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர், எம்எல்ஏ வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

மாவட்டப் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர், எம்எல்ஏ வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

2 mins read
d6a67616-c54b-4002-a862-1759e8ba02f3
அமைச்சர் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டபின் கூடியிருந்த போராட்டக்காரர்கள். படம்: ஊடகம் -

அம­ராவதி: ஆந்­தி­ரா­வில் அமைச்சர், எம்­எல்­ஏ­வின் வீடு­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்ட சம்­ப­வம் அங்கு பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அங்கு கொன­சீமா மாவட்­டத்­தில் வன்­முறை நீடிப்­ப­தால் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஆந்­தி­ரா­வில் உள்ள கொன­சீமா மாவட்­டத்­தின் பெயரை டாக்­டர் பிஆர் அம்­பேத்­கர் கொன­சீமா மாவட்­டம் என்று மாற்ற அம்­மா­நில அரசு முடிவு செய்­துள்­ளது. இது­குறித்து அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்கப்பட்டது.

இதை­ய­டுத்து மாவட்­டத்­தின் பெயரை மாற்­றக்­கூ­டாது என சில தரப்­பி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

குறிப்­பாக, கொன­சீமா பரி­ரக்­‌ஷனா சமிதி, கொன­சீமா சாதனா சமிதி உள்­பட பல்­வேறு அமைப்­பு­கள் சார்­பில் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற போராட்­டத்­தின்­போது மாநில அர­சுக்கு எதி­ரான முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.

அப்­போது போராட்­டக்­கா­ரர்­கள் அங்கு கூடி­யி­ருந்த காவல்­து­றை­யி­னர் மீது கல்­வீசி தாக்­கு­தல் நடத்­தி­னர். இதில் காவ­லர்­கள் பலர் காய­ம­டைந்­த­னர். வன்­முறை வெடித்­ததை அடுத்து காவல்­து­றை­யி­ன­ரும் கள­மி­றங்­கி­னர். போராட்­டக்­கா­ரர்­கள் மீது தடி­யடி நடத்த முற்­பட்­ட­போது, அம­லா­பு­ரம் பகு­தி­யில் உள்ள அம்­மா­நில போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் விஸ்­வார்ப், எம்­எல்ஏ சதீஷ் ஆகி­யோ­ரின் வீடு­கள் தீயிட்டு கொளுத்­தப்­பட்­டன. காவல்­துறை வாக­னம் ஒன்­றும், கல்வி நிறு­வ­னத்­தின் பேருந்து ஒன்­றும் கொளுத்­தப்­பட்­டன.

இத­னால், அப்­ப­கு­தியே போர்க்­க­ளம்­போல் காணப்­பட்­டது.

இதை­ய­டுத்து, வன்­முறை பாதித்த பகு­தி­களில் 144 தடை உத்­த­ரவு போடப்­பட்­டுள்­ளது. கூடு­தல் காவ­லர்­கள் சுற்­றுக்­கா­வல், கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

வன்­மு­றைச் சம்­ப­வத்­தின்­போது இரு­ப­துக்­கும் மேற்­பட்ட காவல்­துறை­யி­னர் காய­ம­டைந்து இருப்­ப­தாக ஆந்­திர உள்­துறை அமைச்­சர் தனேதி வனிதா தெரி­வித்­தார்.

மாவட்­டத்­துக்கு அம்­பேத்­கர் பெய­ரைச் சூட்­டு­வதை நினைத்து பெரு­மை­கொள்­ளா­மல், ஒரு­த­ரப்­பி­னர் பொது­மக்­க­ளைத் தூண்­டி­வி­டு­வ­தாக அவர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் போராட்­டம் நடத்­தி­ய­வர்­க­ளுக்கு மத்­தி­யில் சமூக விரோ­தி­கள் சிலர் ஊடு­ரு­வி­ய­தா­க­வும் அவர்­கள்­தான் வன்­மு­றை­யைத் தூண்­டி­விட்­ட­தா­க­வும் ஆந்­திர அரசு தெரி­வித்­துள்­ளது.