தூரிகை இன்றி நாக்கால் ஓவியம் தீட்டும் இளையர்

தூரிகை இன்றி நாக்கால் ஓவியம் தீட்டும் இளையர்

1 mins read
377c872b-77de-401b-84f3-fca5d994c94d
-

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த 18 வய­தான சுர்லா வினோத் (படம்) தூரிகை இன்றி தனது நாக்­கைக் கொண்டு அழ­கான ஓவி­யங்­களை வரைந்து வியப்­பூட்­டு­கி­றார்.

சிறு வயது முதல் ஓவி­யத்­தில் மிகுந்த ஈடு­பாடு கொண்ட சுர்லா வினோத், பள்ளி நாள்­களில் நிறைய பரி­சு­களை வாங்­கிக் குவித்­துள்­ளார்.

வீட்­டி­லும் பள்­ளி­யி­லும் அவர் வசித்­து­வந்த ஊரா­ரும் தொடர்ந்த ஊக்­கப்­ப­டுத்தி வந்த நிலை­யில், ஒரு­நாள் சமூக ஊட­கத்­தில் ஒரு­வர் தூரி­கை­யைப் பயன்­ப­டுத்­தா­மல் நாக்­கால் ஓவி­யம் தீட்­டு­வ­தைப் பார்த்­துள்­ளார் சுர்லா வினோத். இதை­ய­டுத்து, தாமும் இது­போல் சாதிக்க வேண்­டும் எனும் முடி­வெ­டுத்த அவர், அன்று முதல் இந்த வியத்­தகு ஓவி­யம் தீட்­டும் முறை­யைப் பின்­பற்றி வரு­கி­றார்.

பாராட்டுகளும் விருதுகளும் தேடி வரும் நிலையில், இவர் ஓவியம் தீட்டும் காணொளிகளுக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.