144 தொகுதிகளில் கவனம்; பாதியை பிடிக்க பாஜக குறி

2024 தேர்தல்: பலவீனமான தொகுதிகள் அடையாளம்; அமைச்சர்களுக்குப் பொறுப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பல மாநிலங்­க­ளி­லும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களில் பாஜக மிக­வும் பல­வீ­ன­மாக இருக்­கிறது என்­பதை அந்­தக் கட்சி அடை­யா­ளம் கண்டு இருக்­கிறது.

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல் 2024ல் நடக்க இருப்­ப­தை­யொட்டி அந்­தத் தொகு­தி­களில் சிறப்பு கவ­னம் செலுத்த பாஜக வியூ­கம் வகுத்து இருக்­கிறது.

பாஜக மூத்த தலை­வர்­கள், அமைச்­சர்­கள், பிர­மு­கர்­கள் ஆகியோர் புதன்­கி­ழமை புது­டெல்லி­யில் கட்சி மத்­திய அலு­வ­ல­கத்­தில் கூடினர்.

அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக பல­வீ­ன­மான தொகு­தி­களில் கைக்­கொள்­ளப்­பட வேண்­டிய தேர்தல் உத்­தி­கள் பற்றி உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவும் பாஜக தேசிய தலை­வர் ஜேபி நட்­டா­வும் விவா­தித்­த­தாக கட்­சி­யின் மூத்த தலை­வர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

மொத்­தம் 144 தொகு­தி­களில் வார்டு நிலை­யி­லான நட­வ­டிக்­கை­கள் பலப்­ப­டுத்­தப்­படும் என்று அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட மூத்த தலை­வர் ஒரு­வர் கூறி­ய­தாக ஊட­கங்­கள் கூறின.

அந்­தத் தொகு­தி­களில் கடந்த எட்டு ஆண்டுகால சாத­னை­கள் மக்­க­ளுக்கு எடுத்து விளக்­கப்­படும். கட்­சி­யின் சித்­தாந்­தத்தை மக்­கள் தெரிந்­து­கொள்ள தோதாக பல நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­றும்.

சிறு­பான்மை மக்­க­ளின் வாக்கு­களைக் கவர்­வ­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­படும் என்று அந்­தத் தலை­வர் குறிப்­பிட்­டார்.

அடை­யா­ளம் காணப்­பட்டு இருக்­கும் 144 தொகு­தி­களில் 70 விழுக்­காட்டு தொகு­தி­கள் சிறு­பான்­மை­யி­னர் வசம் உள்­ளன. அல்­லது தாழ்த்­தப்­பட்­டோர் வாக்­கு­கள் அதி­க­மாக உள்ள தொகு­தி­கள் ஆகும்.

அந்த 144 தொகு­தி­களில் பாஜக மத்­திய அமைச்­சர்­கள் அனை­வ­ரும் குறைந்­த­பட்­சம் இரண்டு அல்­லது மூன்று தொகு­தி­களைத் தங்­கள் வசம் எடுத்­துக்­கொண்டு அடுத்த இரண்­டாண்­டு­களில் தொகுதி­ வாக்­கா­ளர்­க­ளைக் கவர்­வ­தற்கு பெரிய அள­வில் முயற்­சி­களை முடுக்­கி­விட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு இருப்­ப­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அநே­க­மாக இந்த நட­வ­டிக்­கை­களை அடுத்த மாதம் கடைசி வாரத்­தில் அல்­லது ஜூலை மாத தொடக்­கத்­தில் பாஜக தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த தேர்­த­லில் அந்த 144 தொகு­தி­களில் குறைந்­த­பட்­சம் பாதி தொகு­தி­களை எப்­ப­டி­யா­வது வென்று­விட வேண்­டும் என்று கட்சி இலக்கு நிர்­ண­யித்து இருப்­ப­தாக தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!