மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ரகமத்துல்லா, 42, என்பவர் 1994ஆம் ஆண்டு முதல் முறையாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். பிறகு 2004ஆம் ஆண்டும் தோல்வியே கிட்டியது. ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனின் உதவியால் அந்தத் தந்தை 10ஆம் வகுப்பு தேர்வில் 333 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
ரகமத்துல்லாவின் புதல்வர் முகம்மது ஃபாரான் வேலை முடிந்து தனது தந்தை வீட்டுக்கு வந்தபின் அவருக்குப் பாடம் கற்றுக்கொடுத்தார்.
இது தனது வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்றும் இதற்குத் தன் மகனே காரணம் என்றும் ரகமத்துல்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரகமத்துல்லாவின் புதல்வர் முகமது ஃபாரான் 10ஆம் வகுப்பில் 98% மதிப்பெண் ணுடன் தேர்ச்சி பெற்றவர்.

