மோடி: குடும்ப அரசியல் கூடாது

மோடி: குடும்ப அரசியல் கூடாது

1 mins read
0cb7d3c1-c743-45a1-90ca-07d83252052f
-

ஹைத­ரா­பாத்: இந்­தி­யா­வில் குடும்ப அர­சி­யல் கூடவே கூடாது என்று பிர­த­மர் நரேந்­திர மோடி வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

குடும்ப அர­சி­யல் கட்­சி­கள் எவ்­வாறு ஊழ­யல்­ம­ய­மாகி உள்­ளன என்­ப­தை­யும் அவை ஒரே ஒரு குடும்­பத்­துக்­காக மட்­டுமே எவ்வாறு செயல்­பட்டு வந்­துள்­ளன என்­பதை­யும் இந்­தியா பார்த்­துக்­கொண்­டு­தான் வந்து இருக்­கிறது என்று அவர் கூறி­னார்.

தெலுங்­கானா தலை­ந­கர் ஹைத­ரா­பாத்­தில் நேற்று பாஜக தொண்­டர்­கள் மத்­தி­யில் உரை­யாற்­றிய திரு மோடி, குடும்ப அர­சி­யல் கட்சி என்­பது வெறும் அர­சி­யல் பிரச்சினை மட்­டு­மல்ல என்­றார்.

இந்­திய ஜன­நா­ய­கத்­தின், இளை­ஞர்­க­ளின் மிகப் பெரிய எதிரி அது­தான் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

குடும்ப அர­சி­யல் கார­ண­மாக இளை­ஞர்­க­ளுக்கு அர­சி­ய­லில் நுழைய வாய்ப்பு கிடைப்­ப­தில்லை என்று திரு மோடி கூறினார்.

குடும்ப அர­சி­யல் நடத்­தும் கட்­சி­கள் தங்­களு­டைய வளர்ச்­சியை மட்­டுமே சிந்­திக்­கின்­றன என்­றும் அவை ஏழை­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டவே இல்லை என்­றும் கூறி­னார்.

ஆட்­சி­யைப் பிடித்து அதைத் தக்­க­வைத்­துக்கொண்டு எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு கொள்­ளை­யடிக்­கவே அத்­த­கைய கட்­சி­கள் முயல்­வ­தாக திரு மோடி கடுமை யாகக் குறிப்­பிட்­டார்.