புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத 2,174 அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து இருக்கிறது.
அதனையடுத்து தேர்தல் செலவு அறிக்கையைத் தாக்கல் செய்யாத அந்தக் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை வருவாய்த் துறை எடுத்து வருகிறது.
தேர்தல் ஆணைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத கட்சிகள், அந்த ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்ட சலுகைகளைப் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அந்த அரசியல் கட்சிகள் மிரண்டுபோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

