ஆற்றில் கவிழ்ந்த ராணுவ வாகனம்; ஏழு வீரர்கள் பலி

ஆற்றில் கவிழ்ந்த ராணுவ வாகனம்; ஏழு வீரர்கள் பலி

1 mins read
15062ec9-e93b-4cc1-9e91-dc61f1685960
-

ஸ்ரீந­கர்: ராணுவ வீரர்­கள் சென்ற வாக­னம் ஆற்­றில் விழுந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் (படம்) ஏழு ராணுவ வீரர்­கள் உயி­ரி­ழந்­த­னர். இந்­தத் துய­ரச் சம்­ப­வம் லடாக் எல்லைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­துள்­ளது.

பயங்­க­ர­வாத ஊடு­ரு­வல்­கள், தாக்­கு­தல்­க­ளைச் சமா­ளிக்க ஏது­வாக லடாக் எல்­லைப் பகு­தி­யில் இந்­திய ராணு­வம் பல்­வேறு முகாம்­களை அமைத்­துள்­ளது. அங்கு ஏரா­ள­மான வீரர்­கள் முகா­மிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் காலை 26 வீரர்­கள் அடங்­கிய ராணுவ வாக­னம் ஒன்று, லடாக் பகு­தி­யின் பர்­தா­பூர் முகா­மில் இருந்து ஹனீப் என்ற இடத்­தில் உள்ள துணை முகா­முக்குச் சென்­றது.

அப்­போது திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்த அந்த வாக­னம் சாலை­யில் இருந்து வில­கிச் சென்று அருகே உள்ள ஷயோக் ஆற்­றில் கவிழ்ந்­தது. வாக­னம் செங்­குத்­தாக விழுந்­த­தால் உருக்­கு­லைந்து போன­தா­க­வும் உயி­ரி­ழந்த வீரர்­க­ளைத் தவிர மற்ற 19 வீரர்­கள் படு­கா­யம் அ­டைந்­துள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

19 பேருக்­கும் அரு­கி­லுள்ள பர்­தா­பூர் மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. தேவைப்­பட்­டால் அவர்­கள் உயர் சிகிச்­சைக்­காக விமா­னம் மூலம் வேறு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­ப­டு­வர் என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஏழு ராணுவ வீரர்­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வம் வேதனை அளிப்­ப­தாக அதி­பர் ராம்­நாத் கோவிந்த், பிர­த­மர் மோடி ஆகி­யோர் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.