'கோதுமை தட்டுப்பாடு இல்லை'

'கோதுமை தட்டுப்பாடு இல்லை'

1 mins read
cc1d920b-3898-4b95-b8c6-3752cb639168
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கோதுமை தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­கக் கூறப்­படு­வது உண்மை அல்ல என்று மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிக் தோமர் தெரி­வித்­துள்­ளார்.

கோது­மையை அதிக அள­வில் ஏற்­று­மதி செய்­வதை தடுக்­கவே திடீர் தடை விதிக்­கப்­பட்­டது என்று அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

கோதுமை ஏற்­று­ம­திக்கு மத்­திய அரசு கடந்த 14ஆம் தேதி தடை விதித்­தது. உள்­நாட்­டில் கோதுமை விலை­யும் உண­வுப் பண­வீக்­க­மும் உயர்­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் இந்த தடை விதிக்­கப்­பட்­டது.