செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
e79288c4-ceec-4f81-a544-30646c51eb72
-

திருப்பதி கோவிலில் நான்கு கி.மீ. தூரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

நகரி: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. கோடை விடுமுறைக்காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் 4 மணிநேரம் பயணம் செய்த ராணுவ அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் கடற்படைத் தளத்திற்கு வருகை தந்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் நான்கு மணிநேரம் பயணம் மேற்கொண்டார். அப்போது, கடலில் நடைபெறும் போர் நடவடிக்கைகள், ஆயுதப் பயன்பாடு, அக்கப்பலில் பணியாற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்திய கடற்படை பலப்படுத்தப்படுவது எந்த நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சி அல்ல என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.