'மக்கள் தலைகுனியும்படி ஏதும் செய்யவில்லை'

'மக்கள் தலைகுனியும்படி ஏதும் செய்யவில்லை'

2 mins read
0902d432-420f-4028-8965-09563c3be85e
-

மோடி: ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறோம்

அக­ம­தா­பாத்: முப்­பது மில்­லி­ய­னுக் கும் மேற்­பட்ட ஏழை­க­ளுக்கு நிரந்­தர வீடு­களும் 60 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட வீடு­க­ளுக்கு குழாய் நீர் இணைப்­பும் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று குஜ­ராத் மாநி­லம், ராஜ்­கோட்­டில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய அவர், கடந்த எட்டு ஆண்­டு­களில் ஏழை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து பாஜக அரசு செயல்­பட்டு வரு­கிறது என்­றும் மக்­கள் வெட்­கித் தலைக்­கு­னி­யும்­படி மத்­திய அரசு எதை­யும் செய்­ய­வில்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

"தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி அரசு நாட்­டிற்கு சேவை செய்து எட்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­கிறது. பல ஆண்­டு­க­ளாக, நாங்­கள் ஏழை­க­ளுக்­கான சேவைக்கு முன்­னு­ரிமை அளித்து வரு­கி­றோம்.

"அனை­வ­ரு­ட­னும் சேர்ந்து, அனை­வ­ருக்­கும் வளர்ச்சி, அனை­வ­ரின் நம்­பிக்கை' என்ற மந்­தி­ரத்தை பின்­பற்றி நாட்­டின் வளர்ச்­சிக்கு புதிய உத்­வே­கத்தை அளித்­துள்­ளோம்," என்று பிரதமர் மோடி கூறினார்.

அர­சின் திட்­டங்­கள் நூறு விழுக்­காடு குடி­மக்­க­ளுக்­கும் சென்­ற­டை­வதை உறுதி செய்­வ­தற்­கான பிரச்­சா­ரத்தை மத்­திய அரசு நடத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஒவ்­வொரு குடி­ம­க­னுக்­கும் வச­தி­களை வழங்­கு­வதை இலக்­கா­கக் கொண்­டால், பாகு­பாடு முடி­வுக்கு வரும் என்­றும் ஊழ­லுக்கு வாய்ப்­பில்லை என்­றும் தெரி­வித்­தார்.

பெண்­க­ளின் வாழ்க்­கைத் தரம் உயர்­வ­தற்கு வங்கிக் கணக்­கு­கள் தொடங்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கணக்­கில் பணம் மாற்­றப்­பட்­டது என்­றும் இல­வச எரி­வாயு உரு­ளை­களை ஏற்­பாடு செய்­த­தா­க­வும் கூறி­னார்.

"தொற்­று­நோய் தொடங்­கி­ய­போது, ஏழை­கள் உணவு நெருக்­க­டியை எதிர்­கொள்­ளத் தொடங்­கி­னர். நாட்டு மக்­க­ளுக்­காக உணவு தானி­யக் கடை­க­ளைத் திறந்­தோம். இல­வச தடுப்­பூ­சி­களை வழங்­கி­னோம்," என்­றார் பிர­த­மர் மோடி.