புதுடெல்லி: தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், கணித பாடத்தில் மாணவிகளை விட மாணவர்களே சிறந்து விளங்குவதாகத் தெரிய வந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சு இந்த ஆய்வை நடத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 118,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 3.4 மில்லியன் மாணவர்கள் பங்கேற்றனர். பத்தாம் வகுப்பில் கணித பாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும் மாணவர்களின் மதிப்பெண் 219 ஆகவும் இருந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

